ஆசிய கோப்பை 2023 : டி20ல ஈஸியா சாதிக்க முடியும் ஆனா இங்க பெரிய சவால் இருக்கு – ஷாஹின், பும்ராவை எச்சரித்த வாசிம் அக்ரம்

Wasim Akram
- Advertisement -

பாகிஸ்தானில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி கோலாகலமாக துவங்கும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பெரும்பாலும் இலங்கையில் நடைபெற்ற முடிய உள்ளது. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடக்கும் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்ற ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே போல 2023 உலகக்கோப்பையில் களமிறங்கும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகள் இத்தொடரிலிருந்தே இறுதிக்கட்டமாக தேர்வு செய்ய உள்ளன.

அதனால் காயத்தை சந்தித்துள்ள வீரர்கள் இந்த தொடரில் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது. அந்த வகையில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற காயத்தை சந்தித்துள்ள வீரர்கள் முழுமையாக குணமடைந்து முதல் முறையாக பல மாதங்கள் கழித்து இந்த தொடரில் களமிறங்கி சிறப்பாக செயல்பட முயற்சிக்க உள்ளனர். அதே போல இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படும் ஜஸ்பிரித் பும்ரா முழுமையாக குணமடைந்து சமீபத்திய அயர்லாந்து டி20 தொடரில் கேப்டனாக ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அபாரமான கம்பேக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

ஈஸியான டி20:
தம்முடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் போட்டியின் எந்த நேரத்திலும் துல்லியமான யார்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை திருப்பக்கூடிய கருப்பு குதிரையான அவர் 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சந்தித்த காயத்திலிருந்து ஒரு வழியாக 11 மாதங்கள் கழித்து தற்போது மீண்டும் விளையாட துவங்கியுள்ளது இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் பும்ரா மட்டுமல்லாமல் ஷாஹின் அப்ரிடி போன்ற ஆசிய அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் சமீப காலங்களில் பெரும்பாலும் டி20 போட்டிகளில் 4 ஓவர்களை மட்டும் வீசி வெற்றிகரமாக செயல்பட்டது போல இந்த ஆசிய கோப்பை எளிதாக இருக்காது என ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அதிகமாக டி20 போட்டிகளில் விளையாட பழகி விட்டள்ளதால் ஒரே நாளில் 10 ஓவர்கள் வீசுவது அனைத்து பவுலர்களுக்கும் சவாலாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இத்தொடர் அந்தப் பிரச்சினையை சரி செய்ய நல்ல வாய்ப்பாக அமையும் எனவும் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா, பாகிஸ்தான் அல்லது இலங்கை என எந்த அணியாக இருந்தாலும் நம்முடைய பவுலர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் 10 ஓவர்கள் வீசுகிறார்களா என்பதை பார்க்க வேண்டும்”

- Advertisement -

“ஏனெனில் இப்போதெல்லாம் அதிகமாக டி20 கிரிக்கெட்டில் விளையாடும் அவர்கள் வெறும் 4 ஓவர்கள் வீசுவதற்கு பழகியுள்ளார்கள். எனவே உலக கோப்பைக்கு முன்பாக இந்த ஆசிய கோப்பையை 50 ஓவர் போட்டிகளாக நடத்துவது ஆசிய கவுன்சிலின் சிறந்த ஐடியாவாகும். இந்த பெரிய தொடரில் நீங்கள் ஒரு போட்டியை வென்றதும் செமி ஃபைனலுக்கு செல்ல முடியாது”

இதையும் படிங்க:என்ன தம்பி என்ன ஆச்சு? நவீன் உல் ஹக்கை கலாய்க்கும் விராட் கோலி ரசிகர்கள் – காரணம் இதோ

“மாறாக ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். மேலும் இது 50 ஓவர் போட்டிகளாகும். டி20 போட்டிகள் கிடையாது. அதாவது ஒருநாள் போட்டிகளில் அசத்துவதற்கு உங்களுக்கு வித்தியாசமான மனநிலை மற்றும் முழுமையான ஃபிட்னஸ் அவசியமாகும்” என்று கூறினார்.

Advertisement