என்ன தம்பி என்ன ஆச்சு? நவீன் உல் ஹக்கை கலாய்க்கும் விராட் கோலி ரசிகர்கள் – காரணம் இதோ

Naveen Ul Haq
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில் கோலகாலமாக துவங்கி பெரும்பாலும் இலங்கையில் நடைபெற உள்ளது. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராக உதவும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாள் உள்ளிட்ட ஆசிய கண்டத்தின் டாப் 6 அணிகள் கோப்பையை வெல்வதற்காக விளையாட உள்ளன. அதில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் 8வது கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அந்த நிலையில் இத்தொடருக்காக இதே இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 3 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதைத் தொடர்ந்து ஆசிய கோப்பையில் விளையாடும் தங்களுடைய அணியை ஆப்கானிஸ்தான் வாரியம் நேற்று வெளியிட்டது. கேப்டன் ஷாஹிதி தலைமையில் வெளியிடப்பட்ட அந்த அணியில் ரசித் கான், முகமது நபி, ரஹ்மத்துல்லா போன்ற தரமான நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
இருப்பினும் அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் ஏமாற்றத்தை சந்தித்துள்ள அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளது பின்வருமாறு. “உங்கள் கண்கள் இருளுடன் எவ்வளவு நன்றாக பொருந்தினாலும் அதை ஒளி என்று நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள்” என்று ஆப்கானிஸ்தான் தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

அதைப் பார்த்த விராட் கோலியின் ரசிகர்கள் “என்ன தம்பி என்ன ஆச்சு என்ன ஆச்சு” என பதிலளித்து கலாய்த்து வருகிறார்கள். ஏனெனில் கோடைகாலத்தில் நடைபெற்ற முடிந்த 2023 ஐபிஎல் தொடரில் லக்னோவில் நடைபெற்ற ஒரு போட்டியின் முடிவில் அவர் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை வழக்கம் போல இதர வீரர்கள் தடுத்த நிலையில் போட்டி முடிந்த பின் விராட் கோலியை பேசி சமாளித்த லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் அந்த வழியாக சென்ற நவீனை வந்து பேசுமாறு அழைத்தார்.

- Advertisement -

ஆனால் அப்போது பேசுவதற்கு எதுவுமில்லை என்று தலையசைத்து சென்ற அவர் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக நவீன கிரிக்கெட்டில் பல சாதனைகளை செய்து இந்தியாவின் நாயகனாக ஜொலிக்கும் விராட் கோலியை மதிக்காமல் நடந்து கொண்ட அவரை ரசிகர்கள் விமர்சித்தனர். அதே போல அப்போட்டியின் இறுதியில் எப்படி என்னுடைய அணியின் வீரரை வம்பிழுக்கலாம் என விராட் கோலியிடம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சண்டைக்கு போனது மற்றொரு கதை.

இதையும் படிங்க:யார் இந்த அனிக்கிட் சவுத்ரி? ரோஹித் மற்றும் கோலிக்கு எதிராக பந்துவீசும் புயல் – பி.சி.சி.ஐ அசத்தல் பிளான்

அந்த சண்டை முடிந்த பின்பும் சமூக வலைதளங்களில் விராட் கோலியை வம்பிழுப்பதை வழக்கமாக வைத்திருந்த நவீன் உல் ஹக் பெங்களூரு தோற்கும் போட்டிகளை மாம்பழத்தை சுவைத்துக் கொண்டே பார்ப்பதாக பதிவிட்டதும் பிரபல ஆப்பிரிக்கன் பத்திரிகையாளர் சிரிக்கும் வீடியோவை பதிவிட்டும் கலாய்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதியில் லக்னோ தோற்று வெளியேறிய போது அவரை அதை மாம்பழத்தை வைத்து மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் கலாய்த்து நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அந்த நிலைமையில் தற்போது விராட் கோலி விளையாடப் போகும் 2023 ஆசிய கோப்பையில் தேர்வாகாத அவரை ரசிகர்கள் கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement