யார் இந்த அனிக்கிட் சவுத்ரி? ரோஹித் மற்றும் கோலிக்கு எதிராக பந்துவீசும் புயல் – பி.சி.சி.ஐ அசத்தல் பிளான்

Aniket
- Advertisement -

ஆசியக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அட்டவணைப்படுத்தப்பட்ட பயிற்சி முகாமில் இந்திய அணியின் வீரர்கள் ஆலூரில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி முகாமின் போது இந்திய அணியின் வீரர்களுக்கு யோ யோ பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஸ்பெஷலாக அனிக்கிட் சவுத்ரி என்கிற நெட் பவுலருக்கு எதிராக பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கண்டி மைதானத்தில் மோத இருக்கும் இவ்வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடருகாக தயாராகும் வகையில் இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அனிக்கிட் சவுத்ரி என்கிற நெட் பவுலருக்கு எதிராக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் பயிற்சி செய்து வருகின்றனர்.

- Advertisement -

இப்படி அணியில் இல்லாத ஒரு பந்துவீச்சாளரை கொண்டு வந்து அவருக்கு எதிராக பயிற்சி செய்வது ஏன்? என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போது பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான சாஹின் அப்ரிடி ரோஹித் சர்மா, விராத் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுத்து இந்திய அணிக்கு ஆட்டம் காட்டினார்.

அதே போன்று இந்திய அணி கடந்த சில வருடங்களாகவே முகமது அமீர், ட்ரென்ட் போல்ட், டேவிட் வில்லி போன்ற இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக திணறி வருகிறது. எனவே எதிர்வரும் ஆசியக் கோப்பை மற்றும் உலக கோப்பை தொடர்களில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிப்பதற்காக ஷாகின் அப்ரிடி போன்றே பந்து வீசும் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அனிக்கிட் சவுத்ரியை நெட் பவுலராக இணைத்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

33 வயதான அனிக்கிட் சவுத்ரி இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும் ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளராக இருந்துள்ளார். கடந்து 2017-ஆம் ஆண்டு விராட் கோலியின் தலைமையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2018 ஆம் ஆண்டு வரை ஆர்.சி.பி அணியில் இருந்த அவர் அதன்பிறகு அந்த அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார்.

இதையும் படிங்க : வீடியோ : ஃபுட் பால் போல சிபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கொடுக்கப்பட்ட சிவப்பு அட்டை – யாருக்கு, எதற்குன்னு தெரியுமா

இருப்பினும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் 2011-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 75 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 247 விக்கெடுகளை வீழ்த்தியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவரை பந்து வீசவைத்து ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement