அரை க்ளாஸ் ஸ்கூல் பையனா பாத்தப்போ.. இதை எதிர்பாக்கவே இல்ல.. சாய் சுதர்சனை வாழ்த்திய வாசிங்டன் சுந்தர்

Washington Sundar
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற வரும் ஒருநாள் தொடரில் இளம் வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாக களமிறங்கி அசத்தியது தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. டிஎன்பிஎல் தொடரில் அறிமுகமாகி சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தேர்வான அவர் 2023 சீசன் இறுதிப் போட்டியில் சென்னைக்கு எதிராக 96 ரன்கள் அடித்து முதல் முறையாக அனைவரது கவனத்தை திரும்பி பார்க்க வைத்தார்.

அதன் காரணமாக இந்தியா ஏ அணிக்காக 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றி பெற வைத்தார். அதைத் தொடர்ந்து கவுண்டி தொடரில் விளையாடிய அவர் ரஞ்சிக்கோப்பை, இராணி கோப்பை போன்ற தமக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் தேர்வானார்.

- Advertisement -

வாழ்த்திய சுந்தர்:
அதில் முதல் போட்டியிலேயே அதிர்ஷ்டமாக விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெற்ற அவர் இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமான 400வது வீரர் என்ற தனித்துவமான பெருமையும் பெற்றார். அந்த வாய்ப்பில் ஜோஹன்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 117 ரன்களை துரத்தும் போது 55* ரன்கள் அடித்த அவர் இந்தியா 8 வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற உதவினார்.

அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த 4வது இந்திய துவக்க வீரர் என்ற சாதனை படைத்த அவருக்கு தினேஷ் கார்த்திக் போன்ற முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த பையன் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பாக செயல்படுவார் என்று ஏற்கனவே தாம் சொன்னதை நிரூபித்துள்ளதாக தமிழகத்தின் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அந்த வரிசையில் மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ட்விட்டர் பக்கத்தில் சாய் சுதர்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது பின்வருமாறு. “பள்ளிப் போட்டியில் முதல் முறையாக உங்களை நான் பார்த்தது இன்னும் எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. இப்போது இருப்பதில் அப்போது நீங்கள் பாதியளவில் மட்டுமே இருந்தீர்கள். ஹாஹா. இந்தியாவுக்காக நீங்கள் மிகவும் எளிதாக கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியதை பார்த்தது விருந்தாக இருந்தது”

இதையும் படிங்க: மைதான பராமரிப்பாளர் டூ லெஜெண்ட் நேதன் லயன்.. யாருமே படைக்காத தனித்துவ உலக சாதனை

“இந்திய அணிக்காக அறிமுகமான உங்களுக்கு வாழ்த்துக்கள் சாய்” என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா அடுத்ததாக டிசம்பர் 19ஆம் தேதி போர்ட் எலிசபெத் நகரில் நடைபெறும் 2வது போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement