மைதான பராமரிப்பாளர் டூ லெஜெண்ட் நேதன் லயன்.. யாருமே படைக்காத தனித்துவ உலக சாதனை

Nathan Lyon 2
- Advertisement -

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. அதில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் எதிர்பார்க்கப்பட்டதை போலவே நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாகிஸ்தானை தெறிக்க விட்டு 360 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

அந்த வெற்றிக்கு டேவிட் வார்னர் 164 ரன்கள் குவித்தது உட்பட அனைத்து வீரர்களும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி முக்கிய பங்காற்றினர். அவர்களுக்கு மத்தியில் முதன்மை ஸ்பின்னரான நேதன் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த 3வது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் உலக அளவில் 8வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

தனித்துவ சாதனை:
முன்னதாக ஜாம்பவான் ஷேன் வார்னே ஓய்வுக்கு பின் நல்ல ஸ்பின்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா தடுமாறிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அடிலெய்ட் நகரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நேதன் லயன் மைதான பராமரிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்படியே கிரிக்கெட்டின் மீது ஏற்பட்ட அதிக ஈர்ப்பால் முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கிய அவர் பின்னர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

அதன் காரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இலங்கைக்கு எதிராக கால்லே நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக நேதன் லயன் அறிமுகமானார். அதில் தம்முடைய கேரியரின் பந்திலேயே இலங்கையின் ஜாம்பவான் குமார் சங்கக்காரவை 10 ரன்களில் அவுட்டாக்கி அட்டகாசமான துவக்கத்தை பெற்ற அவர் அப்போட்டியில் மொத்தம் 6 விக்கெட்கள் எடுத்து ஆஸ்திரேலியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

- Advertisement -

அப்படி தம்முடைய கேரியரின் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்து அவர் தற்போது 123 போட்டிகளில் 501* விக்கெட்களை சாய்த்துள்ளார். கடந்த 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இதுவரை 22 பவுலர்கள் அவரை போலவே தங்களுடைய கேரியரின் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்துள்ளார்கள். ஆனால் அதில் நேதன் லயன் மட்டுமே 500 விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ 2வது ஒன்டே நடைபெறும் போர்ட் எலிசபெத் மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கேரியரின் முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்து பின்னர் 500 விக்கெட்களை எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற தனித்துவமான உலக சாதனையை நேதன் லயன் படைத்துள்ளார், இதற்கு முன் முரளிதரன், வார்னே போன்ற யாருமே இப்படி ஒரு வித்தியாசமான சாதனையை படைத்ததில்லை. அந்த பட்டியல்:
1. நேதன் லயன் : 501 (ஆஸ்திரேலியா)
2. கெய்த் மில்லர் : 170 (ஆஸ்திரேலியா)
3. மௌரிஸ் டேட் : 155 (இங்கிலாந்து)
4. இன்கிதாப் ஆலம் : 124 (பாகிஸ்தான்)
5. பெர்ட் வோல்கர் : 64 (தென்னாப்பிரிக்கா)

Advertisement