இந்தியா – தெ.ஆ 2வது ஒன்டே நடைபெறும் போர்ட் எலிசபெத் மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Port Elizhabeth St George's Stadium
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 தொடரை சமன் செய்த இந்திய அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் அர்ஷிதீப் சிங் 5, ஆவேஷ் கான் 4 விக்கெட்களை எடுத்ததால் சுருண்ட தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 117 ரன்கள் இலக்கை தமிழக வீரர் சாய் சுதர்சன் 55*, ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் அடித்து இந்தியாவை எளிதான வெற்றியை பெற வைத்தனர்.

அதனால் ஆரம்பத்திலேயே பின்தங்கிய தென்னாப்பிரிக்கா இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. மறுபுறம் கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரர்களுடன் அசத்திய இந்தியா 2வது போட்டியிலும் வென்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் போராட உள்ளது.

- Advertisement -

போர்ட் எலிசபெத் மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி டிசம்பர் 19ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ்’ஸ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த 1992 முதல் ஒருநாள் கிரிக்கெட்டை நடத்தி வரும் இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 42 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 35 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 21 வெற்றிகளையும் 13 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

மறுபுறம் இந்த மைதானத்தில் வரலாற்றில் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்தியா வெறும் 1 வெற்றியையும் 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இம்மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (123) அடித்த இந்திய வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இங்கு அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர்களாக அனில் கும்ப்ளே, யுவராஜ் சிங், குல்தீப் யாதவ் (தலா 4) முதல் இடத்தில் உள்ளனர். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 274/7, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2018

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
டிசம்பர் 19ஆம் தேதி போர்ட் எலிசபெத் நகரில் மழை பெய்வதற்கு 10% மட்டுமே வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
செயின்ட் ஜார்ஜ்’ஸ் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தும் இடமாக இருந்து வருகிறது. அதனாலேயே இங்கு நடைபெற்ற கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 3 முறை மட்டுமே 250க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. அந்தளவுக்கு இம்மைதானத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிப்பதற்கு செட்டிலாகி விளையாடுவது அவசியமாகும்.

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியா சொன்ன வார்த்தை பளிச்சிருச்சி.. சாதித்து காட்டிய சாய் சுதர்சன் – ரசிகர்களும் பாராட்டு

இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 233 ரன்களாகும். இங்கு வரலாற்றில் நடைபெற்ற 42 போட்டிகளில் 20 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 21 முறை சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. அந்த வகையில் சமமாக இருக்கும் எதிர்பார்க்கப்படும் இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானித்து சிறப்பாக செயல்படுவது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement