ஹார்டிக் பாண்டியா சொன்ன வார்த்தை பளிச்சிருச்சி.. சாதித்து காட்டிய சாய் சுதர்சன் – ரசிகர்களும் பாராட்டு

Sudharsan
- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த 22 வயதான இளம்வீரர் சாய் சதர்சன் கடந்த 2021-ஆம் ஆண்டு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் தனது 19 வயதிலேயே அறிமுகமானார். அதனை தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ரஞ்சி தொடர், விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட குஜராத் டைட்டன்ஸ் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை குஜராத் அணிக்காக வழங்கினார்.

அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 96 ரன்கள் அடித்த அவரது ஆட்டம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதுவரை ஐபிஎல் தொடரில் 13 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும் நான்கு அரை சதங்களுடன் 507 ரன்களை குவித்து சாய் சுதர்சன் அசத்தினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தனது அற்புதமான ஆட்டத்தை அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்த தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய ஒருநாள் அணியிலும் அவருக்கு இடம் கிடைத்தது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை அற்புதமாக பயன்படுத்தி கொண்ட சாய் சுதர்சன் நேற்று தென்னாப்பிரிக்க அணியின் நிர்ணயத்தை 117 ரன்களை துரத்தியபோது துவக்க வீரராக களமிறங்கி 43 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன் மூலம் அறிமுகப்படியிலேயே அரைசதம் கடந்து சாய் சுதர்சன் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா சாய் சுதர்சன் குறித்து கூறிய ஒரு வார்த்தை தற்போது உண்மையாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐ பி எல் தொடரானது நடைபெறும் போது :

- Advertisement -

கேன் வில்லியம்சன் காயமடைந்த நேரத்தில் அவரது இடத்தில் மூன்றாவது வீரராக களமிறங்கி தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சனின் ஆட்டம் குறித்து பேசிய ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : சாய் சுதர்சன் ஒரு இளம் வீரரை போன்று ஆடவில்லை. அவர் ஒரு முதிர்ச்சியான கிரிக்கெட்டரை போன்று விளையாடி வருகிறார். நிச்சயம் இவரை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணியில் நாம் பார்க்க போகிறோம் என்று அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்.. தனக்கு முன் சாதனையை நிகழ்த்திய நாதன் லயனை வாழ்த்திய அஷ்வின் – விவரம் இதோ

அப்படி ஹார்டிக் பாண்டியா கூறியது போலவே இந்த ஆண்டு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து தனது முதல் போட்டியில் விளையாடுகிறோம் என்ற அழுத்தமே இன்றி முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சனுக்கு ரசிகர்கள் மத்தியிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடதுகை ஆட்டக்காரர் தேவை என்கிற வேளையில் நிச்சயம் சாய் சுதர்சன் அந்த இடத்திற்கு சரியான தீர்வாக இருப்பார் என்றும் பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement