டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்.. தனக்கு முன் சாதனையை நிகழ்த்திய நாதன் லயனை வாழ்த்திய அஷ்வின் – விவரம் இதோ

Ashwin-and-Lyon
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 487 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக டேவிட் வார்னர் 164 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 90 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 271 ரன்கள் மட்டுமே குவித்தது. அதனை தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை குவித்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு 450 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த இரண்டாவது இன்னிங்ஸின் போது ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி வெறும் 89 ரன்களிலேயே ஆல் அவுட்டானது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி சார்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தினார். அதோடு ஆஸ்திரேலியா அணி சார்பாக ஷேன் வார்னே மற்றும் கிளென் மெக்ராத் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது ஆஸ்திரேலிய வீரராக அவர் இந்த 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அதேவேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்கு அடுத்து ஒரு ஆஃப் ஸ்பின்னராக 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் செய்திருக்கிறார். இந்நிலையில் அவரது இந்த சாதனைக்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார். தற்போது 489 விக்கெட்டுளுடன் இருக்கும் அஸ்வின் எதிர்வரும் தென்னாப்பிரிக்க தொடரில் 500 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : தெ.ஆ மண்ணில் அசத்த அவங்களிடம் அட்வைஸ் கேட்டேன்.. நாட்டுக்காக விளையாடியது பற்றி சுதர்சன் பேட்டி

இவ்வேளையில் அவருக்கு முன்னதாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லையனை பாராட்டும் வகையில் அஸ்வின் அவரது சமூக வலைதளப்பக்கத்தில் வாழ்த்தியதாவது : எட்டாவது பவுலராகவும், இரண்டாவது ஆஃப் ஸ்பின்னராகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளீர்கள், “கங்கிராஜுலேஷன் GOAT” என அவர் பதிவுசெய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement