
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 3வது நாள் முடிவில் 358-9 ரன்கள் குவித்துள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் விளையாடும் இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் ரோஹித் சர்மா 3, விராட் கோலி 36, ராகுல் 24, ஜடேஜா 17, பண்ட் 28 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அப்போது ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் – நித்திஷ் ரெட்டி 127 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றினார்கள்.
அதில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் அவுட்டானாலும் நித்திஷ் ரெட்டி சதத்தை அடித்து 105* ரன்களுடன் உள்ளார். அதனால் 3வது நாள் முடிவில் 116 ரன்கள் பின்தங்கியுள்ள இந்தியா போராடினால் வெற்றி பெறலாம் என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் தாம் அசத்துவதற்கு பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முக்கிய பங்காற்றியதாக வாசிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.
மேலும் நித்திசுடன் சேர்ந்து விளையாடியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சூழ்நிலை எதுவாக இருந்தாலும் சண்டையிட வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக்கும். அதற்கு தகுந்தார் போல் விஷயங்கள் திரும்பியது இதயத்தை தொடுவதாக அமைந்தது. இது போன்ற சூழ்நிலையில் நிறைய ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதுவே எங்களுக்கு பெரிய பரிசு. இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் இடமாகவும் இது இருப்பதால் நாங்கள் நல்ல நிலையில் இருப்பது எங்களுக்கு மிகவும் முக்கியம்”
“என்ன நடந்தாலும் நாம் சண்டையிட வேண்டும் என்று நானும் நித்திசும் அடிக்கடி சொல்லிக் கொண்டும். அவர் விளையாடியதை எதிர்ப்புறம் இருந்து பார்த்தது அற்புதமாக இருந்தது. எதுவாக இருந்தாலும் களத்தில் நீண்ட நேரம் விளையாட வேண்டும் என்பதே எங்களுடைய அணியில் இருந்து கொடுக்கப்பட்ட மெசேஜ் ஆகும். கௌதம் கம்பீர் பாய் எனக்கு நிறைய உதவி செய்துள்ளார். ஏனெனில் அவர் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்”
இதையும் படிங்க: அறிமுக தொப்பி வாங்கிய தனது ஹீரோ முன்னரே சாதித்தும் காட்டிய நிதீஷ் ரெட்டி – விவரம் இதோ
“என்னுடைய பேட்டிங் திறன் அணிக்கு மிகவும் முக்கியம் என்று அவர் தொடர்ந்து என்னிடம் கூறி வருகிறார். அதே போல பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் சர்மாவும் எனது ஆட்டத்தில் வேலை செய்துள்ளார். ஆஸ்திரேலியர்கள் போட்டியின் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விஷயங்களை முயற்சிப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதை சமாளிக்க அபிஷேக் நாயர் எங்களுக்கு நிறைய திட்டங்களை கொடுத்துள்ளது விஷயங்களை எளிதாக மாற்ற உதவியது” எனக் கூறினார்.