அறிமுக தொப்பி வாங்கிய தனது ஹீரோ முன்னரே சாதித்தும் காட்டிய நிதீஷ் ரெட்டி – விவரம் இதோ

Nitish-and-Kohli
- Advertisement -

இந்தியாவின் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்த வேளையில் வெகுவிரைவாக இந்திய அணிக்காகவும் அவர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில் நடைபெற்ற முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தார்.

தனது ஹீரோ முன்னரே சாதித்த நிதீஷ் ரெட்டி :

அதனைத்தொடர்ந்து அவர் தனது தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் அடுத்த அடுத்த டி20 தொடர்களில் இடம் பிடித்து விளையாடியிருந்தார். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்ததால் நிச்சயம் ஒரு ஆல்ரவுண்டராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் சாதிக்க முடியும் என்று பலரும் நம்பினர்.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணியின் பயிற்சியாளரான கம்பீரும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்காக தேர்வு செய்திருந்தார். இருப்பினும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போதே அவருக்கு அவரது ஃபேவரைட் வீரரான விராட் கோலியின் கையால் அறிமுக தொப்பி கிடைத்தது.

அப்போது பேசியிருந்த நிதீஷ்குமார் ரெட்டி கூறுகையில் : நான் எனக்கு பிடித்த வீரரான விராட் கோலியிடம் இருந்து அறிமுக தொப்பியை கைப்பற்றியது கனவு போன்றுள்ளதாகவும் அவருடன் இணைந்து விளையாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சர்வதேச சதத்தை பூர்த்தி செய்தும் அசத்தியுள்ளார். நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 176 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 105 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : அன்னைக்கு அஷ்வின்.. இன்னைக்கு நிதீஷ் ரெட்டி.. ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்ற – முகமது சிராஜ்

இப்படி தனது ஹீரோவான விராட் கோலி கையில் இருந்து அறிமுக தொப்பியை வாங்கிய அவர் தற்போது அவரது கண்ணுக்கு முன்னரே தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து தான் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார்.

Advertisement