- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அஷ்வின் மட்டுமல்ல இந்திய ஒருநாள் அணிக்கு சர்ப்ரைஸ்ஸாக தேர்வாகியுள்ள மற்றொரு வீரர் – யார் தெரியுமா?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே வரும் ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் உடற்தகுதிக்காக காத்திருந்த பிசிசிஐ ஒருவழியாக நேற்று இரவு இந்த ஒருநாள் தொடருக்கான அணியை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதில் இன்னும் ரோகித் சர்மா விளையாடும் அளவிற்கு உடற்தகுதி பெறாததால் அவர் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ராகுலும், துணை கேப்டனாக பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுதவிர 18 பேர் கொண்ட முறையான ஒருநாள் தொடரின் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இப்படி வெளியான இந்த அணியில் பல மாற்றங்கள் இருந்தன. விஜய் ஹசாரே தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றிஅண்மையில் டி20 கிரிக்கெட் அணிக்கு திரும்பிய தமிழக வீரர் அஷ்வினுக்கு மீண்டும் அணியில் கம்பேக் கொடுக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தற்போது மற்றொரு சர்ப்ரைஸ்ஸாக அமைந்த விடயம் யாதெனில் தமிழ்நாட்டில் இருந்து மற்றொரு வீரரும் தேர்வாகியுள்ளார். அந்த வீரர் 22 வயதான வாஷிங்டன் சுந்தர் தான். ஏற்கனவே இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் முக்கிய வீரராக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக 4 போட்டிகளில் ஆடியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : கே.எல் ராகுல் கேப்டன் ஆனது தெரியும். துணைக்கேப்டன் யார் தெரியுமா? – பவுலருக்கு அடித்த ஜாக்பாட்

ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் அவருக்கு இந்த தென் ஆப்ரிக்க தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

- Advertisement -
Published by