கே.எல் ராகுல் கேப்டன் ஆனது தெரியும். துணைக்கேப்டன் யார் தெரியுமா? – பவுலருக்கு அடித்த ஜாக்பாட்

Bumrah-1
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒரு டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த தொடருக்கு பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் அங்கு நடைபெற இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா காயம் காரணமாக பெங்களூரில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

IND

இந்நிலையில் அவருடைய உடல் தகுதி விளையாடும் அளவிற்கு இன்னும் ஃபிட்டாக இல்லாததால் அவர் ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்தும் விலகியுள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் புதிய கேப்டனாக முன்னணி தொடக்க வீரர் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு சேர்த்து இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக ஷிகர் தவான், அஷ்வின் போன்றோருக்கு அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு சுழற்பந்து வீச்சாளர் சாஹலும் அணிக்குத் திரும்பியுள்ளார். மேலும் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான அணியின் துணை கேப்டனாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

bumrah 1

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்த தேர்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பும்ரா ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளுக்கு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு இந்தத் துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான அணி வீரர்களின் விவரம் இதோ :

இதையும் படிங்க : தெ.ஆ தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு. யார் யாருக்கு இடம்? – முழுலிஸ்ட் இதோ

1) கே.எல் ராகுல், 2) ஷிகர் தவான், 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) விராட் கோலி, 5) சூரியகுமார் யாதவ், 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) வெங்கடேஷ் ஐயர், 8) ரிஷப் பண்ட், 9) இஷான் கிஷன், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) ரவிச்சந்திரன் அஷ்வின், 12) வாஷிங்க்டன் சுந்தர், 13) ஜஸ்பிரீத் பும்ரா, 14) புவனேஷ்வர் குமார், 15) தீபக் சாகர், 16) பிரசித் கிருஷ்ணா, 17) ஷர்துல் தாகூர், 18) முகமது சிராஜ்.

Advertisement