தெ.ஆ தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு. யார் யாருக்கு இடம்? – முழுலிஸ்ட் இதோ

Ind
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற இருக்கிறது. ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னதாக இந்திய ஒருநாள் அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

IND

ஏற்கனவே காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இழந்த ரோகித் சர்மா உடற்தகுதி பெறுவார் என்று காத்திருந்த வேளையில் ரோஹித் இன்னும் விளையாடும் அளவிற்கு தயாராகவில்லை என்று தெரியவந்துள்ளதால் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்தும் வெளியேறி உள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதோடு ஏற்கனவே வெளியான தகவலின்படி யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அஷ்வின் ஆகியோர் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளனர். அதுமட்டுமின்றி நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரில் சிறப்பான விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைத்துள்ளது. மேலும் அனுபவ வீரரான ஷிகார் தவானும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்த தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை இன்று பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ :

இதையும் படிங்க : நான் பாத்ததிலேயே இவர் தான் இந்தியாவின் நம்பர் 1 பவுலர். என்னமா பவுலிங் பண்றாரு – ஸ்ரீநாத் புகழாரம்

1) கே.எல் ராகுல், 2) ஷிகர் தவான், 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) விராட் கோலி, 5) சூரியகுமார் யாதவ், 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) வெங்கடேஷ் ஐயர், 8) ரிஷப் பண்ட், 9) இஷான் கிஷன், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) ரவிச்சந்திரன் அஷ்வின், 12) வாஷிங்க்டன் சுந்தர், 13) ஜஸ்பிரீத் பும்ரா, 14) புவனேஷ்வர் குமார், 15) தீபக் சாகர், 16) பிரசித் கிருஷ்ணா, 17) ஷர்துல் தாகூர், 18) முகமது சிராஜ்.

Advertisement