நான் பாத்ததிலேயே இவர் தான் இந்தியாவின் நம்பர் 1 பவுலர். என்னமா பவுலிங் பண்றாரு – ஸ்ரீநாத் புகழாரம்

Srinath
- Advertisement -

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டில் தங்களது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் எங்கு சென்றாலும் வெற்றியை பெற்று வரும் இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்க மண்ணிலும் முதல் போட்டியை வெற்றியுடன் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.

Ashwin

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜவகல் ஸ்ரீநாத் தான் பார்த்ததிலேயே நம்பர் ஒன் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்றால் ஒருவர் தான் அவர் பும்ரா தான் என புகழ்ந்துள்ளார். நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் பும்ராவின் பௌலிங் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதோடு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் குறித்து பேசிய ஸ்ரீநாத் கூறுகையில் : நான் பல இந்திய வேகப்பந்துவீச்சாளர் உடன் விளையாடி இருக்கிறேன். பலரை பார்த்திருக்கிறேன் ஆனால் பும்ராவை தான் நான் பெஸ்ட் பவுலர் லிஸ்டில் முதலாக வைப்பேன். ஏனெனில் அவர் டாப் கிளாஸ் பவுலர் நிச்சயம் அவர் ஹால் ஆஃப் ஃபேம் பட்டத்தைப் பெறும் அளவிற்கு தற்போதே சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

bumrah 1

இன் ஸ்விங்கர், அவுட் ஸ்விங்கர், ஸ்லோவர் பால், யார்க்கர், பவுன்சர், ஸ்லோ ஷார்ட் பால், ஸ்லோ கட்டர் என அனைத்து விதமான பந்துகளையும் அவர் வீசுகிறார். அவர் பந்து வீசுவதை பார்ப்பதே தனி அழகாக உள்ளது. நிச்சயம் என்னை பொருத்தவரை இந்தியாவின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்றால் அது பும்ரா தான் என அவர் புகழ்ந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : தவறினை ஒப்புக்கொண்ட கோலி. முதல் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களுக்கு அபராதம் – காரணம் இதுதான்

நடைபெற்று முடிந்துள்ள முதலாவது போட்டியின்போது ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் தனது 100வது கைப்பற்றினார். இதுவரை மொத்தம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இந்திய மண்ணில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement