தவறினை ஒப்புக்கொண்ட கோலி. முதல் போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களுக்கு அபராதம் – காரணம் இதுதான்

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பாக்ஸிங் டே போட்டி துவங்கி நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முதலே தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது.

INDvsRSA

- Advertisement -

இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டாலும் ஐந்தாம் நாள் காலையே இந்திய அணி இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக 305 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் இவ்வேளையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் வீரர்கள் அனைவருக்கும் போட்டியின் சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதித்து ஐ.சி.சி தண்டனை கொடுத்து உள்ளது.

Ashwin

இதற்கு காரணம் யாதெனில் இந்திய அணியின் வீரர்கள் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்த முதல் போட்டியின்போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஒரு ஓவரை குறைவாக வீசியதாக மைதானத்தில் இருந்த அம்பயர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அதனை விராட் கோலியும் ஒப்புக் கொண்டதால் மேலும் விசாரிக்காமல் வீரர்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஷஸ் தோல்வி எதிரொலி இங்கிலாந்து அணியில் கேப்டன் மாற்றம் – புதிய கேப்டன் இவர்தானாம்

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜொகனஸ்பர்க் மைதானத்தில் வரும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement