ஆஷஸ் தோல்வி எதிரொலி இங்கிலாந்து அணியில் கேப்டன் மாற்றம் – புதிய கேப்டன் இவர்தானாம்

England
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி அங்கு நடைபெற்றுவரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது மட்டுமின்றி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் அடுத்து வரும் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெறும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

aus vs eng

- Advertisement -

அந்த அளவிற்கு இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணி தங்களது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரில் ஜோ ரூட் தவிர வேறு யாரும் சரியாக விளையாடவில்லை. அனைத்து பேட்ஸ்மேன்களுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். என்னதான் ரூட் பேட்டிங்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கேப்டன்சி மிகவும் மோசமாக உள்ளது.

இந்த ஆண்டு மட்டும் 9 போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்துள்ளதால் அவரது இந்த கேப்டன்சி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங் ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி போன்று வேறு எந்த ஒரு அணியும் இவ்வளவு மோசமாக விளையாடியது கிடையாது என்று வெளிப்படையாக விமர்சித்து இருந்தார்.

Stokes

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் ஆர்தர்டன் அடுத்த இங்கிலாந்து கேப்டன் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஆஷஸ் தொடர் தோல்விக்கு அணியின் கேப்டனாக ஜோ ரூட் தான் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் ஒரு தொடர் எங்கு நடைபெற்றாலும், எந்த ஒரு தொடராக இருந்தாலும் சரி அந்த தோல்விக்கு அணியின் கேப்டன் பொறுப்பு.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி கிட்ட நெறைய பேசிட்டேன் ஆனா எந்த பதிலும் இல்லை – பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்த ஹர்பஜன்

அந்த வகையில் இந்த ஆஷஸ் தொடரின் தோல்வியை அடுத்து ரூட் பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்னை பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் அடுத்த கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் தான் சிறந்த தேர்வாக இருப்பார் என மைக்கேல் ஆர்தர்டன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement