தோனி கிட்ட நெறைய பேசிட்டேன் ஆனா எந்த பதிலும் இல்லை – பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்த ஹர்பஜன்

Harbhajan
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இந்திய அணிக்காக 1998-ஆம் ஆண்டு அறிமுகமான ஹர்பஜன்சிங் 103 டெஸ்ட் போட்டிகளிலும், 236 ஒருநாள் போட்டிகளிலும், 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேல் கிரிக்கெட் பயணத்தில் இருந்த ஹர்பஜன் தற்போது அதற்கு கடந்த வாரம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

harbhajan 1

- Advertisement -

கடந்த 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் எந்த ஒரு வடிவத்திலும் இடம் கிடைக்கவில்லை. மேலும் 2011 ஆம் ஆண்டு முதலே அவர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 2011ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர் வெறும் 10 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். அந்த அளவிற்கு அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் இருந்தன.

அந்த காலகட்டத்தில் அஷ்வின், ஜடேஜா போன்ற பல சுழற்பந்து வீச்சாளர்கள் அணிக்குள் வந்ததால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில் தான் தோனியுடன் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங் கூறுகையில் : நான் கேப்டன் தோனியிடம் சென்று என்னை ஏன் அணியில் இருந்து நீக்குகிறீர்கள் என்று பலமுறை கேட்டு உள்ளேன். ஆனால் இதுவரை அவர் என்னிடம் சரியான பதிலை வழங்கியதில்லை.

harbhajan 1

பின்னர் ஒரு கட்டத்தில் நான் அந்த கேள்வியை கேட்பதையே நிறுத்தி விட்டேன். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு என்னை இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்கவே யாரும் விடவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : செஞ்சூரியன் மைதானத்தில் நான் சதமடிக்க நம்ம பவுலர்கள் தான் காரணம் ராகுல் மகிழ்ச்சி – ஏன் இப்படி சொன்னாரு?

2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு என்னுடைய வாய்ப்பு இந்திய அணியில் முற்றிலுமாக பறிபோனது. ஆனாலும் நான் ஐபிஎல் அணிகளில் தொடர்ச்சியாக விளையாடி வந்தேன். இதுவரை என்னை இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டியதற்கான சரியான காரணத்தை தோனி என்னிடம் கூறியது இல்லை என்று ஹர்பஜன் சிங் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Advertisement