செஞ்சூரியன் மைதானத்தில் நான் சதமடிக்க நம்ம பவுலர்கள் தான் காரணம் ராகுல் மகிழ்ச்சி – ஏன் இப்படி சொன்னாரு?

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதுமட்டுமின்றி கடைசியாக இந்திய அணி விளையாடிய 3 பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று தங்களது ஆதிக்கத்தை வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து வருகிறது.

Ashwin

- Advertisement -

செஞ்சூரியன் மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா அணி தான் வெற்றி பெறும் என்று அனைவரும் கூறிய வேளையில் இந்திய அணி இங்கும் தங்களது வெற்றிக்கொடியை தற்போது நாட்டியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனும், துவக்க வீரருமான ராகுல் முதல் இன்னிங்சில் போது தனது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த முதல் இன்னிங்சில் 260 பந்துகளை சந்தித்த அவர் 16 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 123 ரன்களை குவித்தார். இப்படி தென்னாப்பிரிக்க மண்ணில் தான் சதம் அடிக்க இந்திய பவுலர்கள் தான் உதவினார்கள் என்பது குறித்து ராகுல் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அவர் இப்படிக் கூற காரணம் யாதெனில் : பயிற்சியின் போது நான் நமது பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட போது அயல்நாட்டு மண்ணில் நமது பவுலர்கள் எவ்வளவு சிறப்பாக பந்து வீசுகிறார்கள் என்பது எனக்கு தெரியவந்தது.

rahul 1

அந்த அளவிற்கு வலைப்பயிற்சியின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் என்னை அச்சுறுத்தும் வகையில் பந்துகளை வீசினார்கள். அவர்களது வேகம் மற்றும் துல்லியம் ஆகியவை இந்த மைதானத்தில் அச்சுறுத்தியது. இருப்பினும் பயிற்சியின் போது அவர்களை சமாளித்து விளையாடினேன். அப்போதே எனக்கு இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 29 வயதிலேயே நான் ஓய்வை அறிவிக்க இதுமட்டுமே காரணம் – முக்கிய காரணத்தை கூறிய டிகாக்

இந்திய பவுலர்களை அங்கு எதிர் கொண்டு விளையாடி பின்னர் போட்டியின்போது தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை எதிர் கொள்வது சற்று எளிதாக இருந்தது. அதன் காரணமாகவே என்னுடைய சிறப்பான ஆட்டம் இந்த போட்டியில் வெளிப்பட்டுள்ளது என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement