29 வயதிலேயே நான் ஓய்வை அறிவிக்க இதுமட்டுமே காரணம் – முக்கிய காரணத்தை கூறிய டிகாக்

Dekock-3
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நேற்று இரவு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரரான டிகாக் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் 29 வயதே ஆகும் டிகாக் 54 போட்டிகளில் விளையாடி 3300 ரன்கள் குவித்தது மட்டுமின்றி 6 சதங்களும் அடித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரராக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தற்போதைய அணியில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராகவும் இருக்கும் டிகாக் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது அனைவரது மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

dekock 1

- Advertisement -

இந்நிலையில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏன் ஓய்வு பெற்றேன் என்பது குறித்த விவரத்தை அவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த முடிவினை நான் மிக சுலபமாக எடுக்கவில்லை. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னுடைய எதிர்கால வாழ்க்கை குறித்து யோசித்தும், என்னுடைய கிரிக்கெட் பயணத்தின் அடுத்த கட்டத்தை முன்னிறுத்தியுமே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

என்னுடைய மனைவி மற்றும் குழந்தை ஆகியோருடன் நான் நேரம் செலவிட வேண்டியது அவசியம். இப்பொழுது தான் எங்களுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. ஒரு குடும்பமாக நான் அவர்களுடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடுவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இருப்பினும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.

Dekock-2

இதனால் வரை என்னுடன் பயணித்த பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. இனி வரும் நாட்களில் நான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வை அறிவிக்க முக்கிய காரணம் யாதெனில் : உலகில் நாம் எதை வேண்டுமானாலும் எளிதாக வாங்கிவிடலாம் ஆனால் கடந்துபோன நேரங்களையும், நாட்களையும் நம்மால் வாங்க முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியிடம் நாங்கள் அடைந்த இந்த மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – டீன் எல்கர் பேட்டி

எனவே என்னுடைய குடும்பத்துடன் நான் அதிக நேரம் இருக்க வேண்டும் என்கிற காரணத்தினாலேயே தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். நேரம் என்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில் என்னுடைய நேரத்தை எனது மனைவி மற்றும் குழந்தையுடன் செலவிட விரும்புகிறேன். இதன் காரணமாகவே நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டிகாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement