இந்திய அணியிடம் நாங்கள் அடைந்த இந்த மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – டீன் எல்கர் பேட்டி

Elgar
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிககா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 26-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது 113 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதோடு இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Ashwin

இந்த போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றதால் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் கருதப்பட்ட அந்த மைதானத்தில் இந்திய அணி தனது அபாரமான ஆட்டத்தின் காரணமாக அவர்களை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறுகையில் : இந்த மைதானத்தில் நாங்கள் தோல்வியடைந்தது சற்று வருத்தத்தை தந்துள்ளது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சில சில தவறுகளை செய்துள்ளோம்.

Agarwal

இந்திய அணி மிகவும் பாசிட்டிவான கிரிக்கெட்டை விளையாடியது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் சரியான அடித்தளத்தை அமைத்தது அவர்களுக்கு அனைத்து வழிகளையும் பிரகாசப்படுத்தினர். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினாலும் அவர்கள் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி விட்டார்கள்.

இதையும் படிங்க : உலகின் 3 மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் – புகழ்ந்து தள்ளிய கேப்டன் விராட் கோலி

ஆனால் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதத்தினால் நாங்கள் இந்த போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளோம். இந்த போட்டியில் பேட்டிங்கில் ஏற்பட்ட மோசமான சொதப்பலே தோல்விக்கு காரணம் என எல்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement