உலகின் 3 மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் – புகழ்ந்து தள்ளிய கேப்டன் விராட் கோலி

Kohli-2 Press
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 327 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 197 ரன்களை மட்டுமே அடித்தது. அதனைத்தொடர்ந்து 130 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்சில் 174 ரன்களை குவிக்க தென் ஆப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Ashwin

- Advertisement -

ஆனால் அதனை துரத்திய தென் ஆப்பிரிக்க அணியானது 2வது இன்னிங்சில் 191 ரன்கள் மட்டுமே குவித்ததால் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் :

இந்த போட்டியில் நாங்கள் சிறப்பான துவக்கத்தை பெற்றோம். இரண்டாம் நாள் ஆட்டம் முழுவதும் மழையினால் பாதிக்கப்பட்டாலும் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். தென்னாப்பிரிக்க மண்ணில் அவர்களை எதிர்த்து விளையாடுவது கடினம். இருந்தாலும் இம்முறை நாங்கள் சரியான ஆட்டத்தை இங்கு விளையாடி உள்ளோம். டாஸ் வெற்றி பெற்று வெளிநாட்டு மைதானங்களில் பேட்டிங் செய்வது என்பது ஒரு சவாலான முடிவுதான்.

Shami

இருப்பினும் ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். அதனால் எங்களால் 300 மற்றும் 320 ரன்கள் குவித்தால் போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். அதன்படி முதல் இன்னிங்சில் ரன்களும் கிடைத்தன. பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள்.அதிலும் குறிப்பாக முகமது ஷமி அசத்தலாக பந்துவீசினார். உண்மையிலேயே அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் தான்.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ அணியை எளிதில் வீழ்த்த இதுவே காரணம். ஆட்டநாயகன் கே.எல் ராகுல் – பேசியது என்ன?

என்னை பொருத்தவரை தற்போது உள்ள உலகின் மூன்று மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் நிச்சயம் ஷமியும் ஒருவர். அந்த அளவிற்கு அவர் தொடர்ச்சியாக தனது அற்புதமான பந்துவீச்சினை வெளிப்படுத்தி வருகிறார். அவருடைய லைன் மற்றும் லென்த் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் கொடுக்கும் ஒன்றாகவும் இருந்து வருகிறது. அதோடு அவரது விக்கெட் வீழ்த்தும் திறனும் ஒரு கேப்டனாக எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கோலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement