தெ.ஆ அணியை எளிதில் வீழ்த்த இதுவே காரணம். ஆட்டநாயகன் கே.எல் ராகுல் – பேசியது என்ன?

Rahul
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் முடிவு பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

rahul 1

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்சில் போது நங்கூரம் பாய்ச்சிய ராகுல் 260 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 123 ரன்களை குவித்தார். அவரது இந்த பிரமாதமான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ராகுல் கூறுகையில் : இந்திய அணிக்கு இந்த போட்டியில் நல்ல துவக்கம் தேவைப்பட்டது. இது போன்ற வெளிநாட்டு மைதானங்களில் நல்ல துவக்கம் கிடைப்பது என்பது சாதாரண விடயம் கிடையாது. இப்படி ஒரு சவாலான விடயத்தில் இந்த போட்டியை நல்ல முறையில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

shami 1

நான் என்னுடைய பேட்டிங் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை. நிதானமாக மனநிலையுடன் மட்டுமே விளையாட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு விளையாடினேன். அதன்படி சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி. வெளிநாட்டு மண்ணில் சதமடிப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அதேபோன்று இந்திய அணியின் பவுலிங் யூனிட் இந்த போட்டியில் பிரமாதமாக பந்து வீசியது.

இதையும் படிங்க : டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை : முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் நிலை என்ன?

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக உள்ளது. அதனால் தான் இந்திய அணி எளிதில் வெளிநாடுகளில் வெற்றி பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக முகமது ஷமி இந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அவரது அற்புதமான பந்துவீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement