டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை : முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் நிலை என்ன?

IND
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை உருவாக்கி அதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெரும் வகையில் அதற்குண்டான போட்டிகளை நடத்தி வருகிறது. அப்படி நடைபெற்று முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்திய நிலையில் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

wtc ind

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட தற்போதைய டெஸ்ட் தொடரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வந்துள்ளதால் இந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு என்ன நிலையில் உள்ளது என்பது குறித்தே இந்த பதிவு.

அதன்படி கடந்த 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணி இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

IND

இதுவரை நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் தோல்வியும், இரண்டு போட்டியிலும் டிரா செய்துள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி 54 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : 29 வயதிலேயே ஓய்வை அறிவித்து ஷாக் கொடுத்த தெ.ஆ வீரர் – நேத்து மேட்ச்ல தான் ஆடுனாரு

இந்த பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்திலும், இலங்கை அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் அணி மூன்று வெற்றி மற்றும் ஒரு தோல்வி பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement