29 வயதிலேயே ஓய்வை அறிவித்து ஷாக் கொடுத்த தெ.ஆ வீரர் – நேத்து மேட்ச்ல தான் ஆடுனாரு

Dekock-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் முடிவு பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடிய தென்ஆப்பிரிக்க அணியின் அனுபவ வீரரான குவின்டன் டிகாக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று இரவு தனது அறிக்கையை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

dekock 1

- Advertisement -

29 வயதான குவின்டன் டிகாக் இதுவரை தென்ஆப்பிரிக்கா அணிக்காக 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,300 ரன்களை குவித்துள்ளார். இதில் 6 சதங்கள் அடங்கும் தற்போது உள்ள தென் ஆப்பிரிக்கா அணியில் அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவ வீரராக பார்க்கப்படும் இவர் அணியில் இருந்து வெளியேறி உள்ளது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது.

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டிகாக் முதல் இன்னிங்சில் 34 ரன்களை குவித்தார். அதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த இரண்டு இன்னிங்சிலும் இவர் போல்டாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிகளவு கவனம் செலுத்தவே டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளார் என்று தெரிகிறது.

dekock

இந்நிலையில் திடீரெனெ டிகாக் நேற்று இரவு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வு முடிவினை திடீரென அறிவித்துள்ளார். மேலும் இது உடனடியாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று நீண்ட நாட்களாக யோசித்த பின்னரே நல்ல தெளிவான மனநிலையுடன் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியது பெருமையான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசியாக இந்தியா விளையாடிய 3 பாக்சிங் டே போட்டியிலும் இந்திய அணி செய்த சம்பவம் – என்ன தெரியுமா?

இந்த ஓய்வு அறிவிப்பை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளது. அவரின் இந்த ஓய்வுக்கு ரசிகர்கள் தனது வருத்தத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement