IND vs NZ : நீங்க ஆடுனவரை போதும் தமிழக வீரரை வெளியேற்றிய கேப்டன் பாண்டியா – பிளேயிங் லெவன் இதோ

INDvsNZ
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மிக முக்கியமான மூன்றாவது டி20 போட்டியானது சற்று முன்னர் நேப்பியர் நகரில் துவங்கியது. இந்த போட்டி இந்திய நேரப்படி 11:30 மணிக்கு டாஸ் போடப்பட இருந்த வேளையில் மைதானத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக டாஸ் போட சற்று காலதாமதம் ஏற்பட்டது.

INDvsNZ

- Advertisement -

அதன் பின்னர் தற்போது மைதானம் முற்றிலுமாக தயாராகிய பிறகு சில நிமிடங்களுக்கு முன்னர் போடப்பட்ட டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பந்து வீச தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் கடந்த இரண்டாவது போட்டியிலேயே சில வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காததால் இந்த போட்டியிலாவது மாற்றம் நிகழுமா என்று பெரிதும் எதிர்பார்த்தனர்.

Washington-Sundar

அந்த வகையில் இந்த போட்டியில் இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக தமிழக கிரிக்கெட் வீரரான வாஷிங்க்டன் சுந்தரை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். மற்றபடி இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் நிகழவில்லை.

- Advertisement -

டி20 உலககோப்பை தொடரில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேலுக்கு அந்த தொடரில் ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. அதனாலே அவருக்கு இந்த 3 ஆவது போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதன்படி இந்த மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs NZ : 3 ஆவது டி20 போட்டி துவங்குவதிலும் ஏற்பட்டுள்ள சிக்கல் – மழையால் போட்டியில் ஏற்படவுள்ள மாற்றம்

1) இஷான் கிஷன், 2) ரிஷப் பண்ட், 3) சூரியகுமார் யாதவ், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தீபக் ஹூடா, 7) புவனேஷ்வர் குமார், 8) ஹர்ஷல் பட்டேல், 9) அர்ஷ்தீப் சிங், 10) முகமது சிராஜ், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement