IND vs NZ : 3 ஆவது டி20 போட்டி துவங்குவதிலும் ஏற்பட்டுள்ள சிக்கல் – மழையால் போட்டியில் ஏற்படவுள்ள மாற்றம்

Napier-Ground
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த 18-ஆம் தேதி வெலிங்டனில் நடைபெற இருந்த வேளையில் அப்போட்டி மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து 20-ஆம் தேதி மவுண்ட் மாங்கனி நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

INDvsNZ

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று நேப்பியர் நகரில் நடைபெற இருந்தது. இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் வேளையில் இந்திய நேரப்படி பகல் 11:30 மணிக்கு போடப்பட வேண்டிய டாஸ் தற்போது தாமதமாகியுள்ளதால் போட்டி துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே நாம் நமது பக்கத்தில் வெளியிட்டிருந்த வானிலை அறிக்கையின் படி இன்றைய போட்டியின் போது மழை பெய்ய அதிக வாய்ப்பு இருந்ததை சுட்டிக்காட்டி இருந்தோம். அதன்படி இன்று நேப்பியரில் பெய்து வரும் மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருப்பதினால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Napier

இதன் காரணமாக போட்டி துவங்குவதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அப்படி மழை காரணமாக போட்டி துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் போட்டியில் சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மழை இன்னும் ஒருமணி நேரத்திற்கு மேல் பெய்யும் பட்சத்தில் போட்டியானது ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெறும்.

- Advertisement -

அல்லது ஒருவேளை மழை நீண்ட நேரம் பெய்து ஈரப்பதமும் இருந்ததால் இந்த 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியும் மீண்டும் முதல் போட்டியை போன்று கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : நியூசிலாந்து வீரரை வீழ்த்த தோனி போலவே திட்டம் தீட்டி கொடுத்த ரிஷப் பண்ட் – பாராட்டிய வர்ணனையாளர்கள்

இந்த போட்டி நடைபெற்று இந்திய அணி அதில் வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றும். அதே வேளையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை (1-1) என்ற கணக்கில் சமநிலை அடையும். ஆனால் போட்டி ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டாலும் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement