வீடியோ : நியூசிலாந்து வீரரை வீழ்த்த தோனி போலவே திட்டம் தீட்டி கொடுத்த ரிஷப் பண்ட் – பாராட்டிய வர்ணனையாளர்கள்

Pant-and-Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று முன்தினம் மவுன்ட் மாங்கனி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவின் அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன்காரணமாக இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் 111 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதேபோன்று பந்துவீச்சில் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளரான தீபக் ஹூடா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அதேபோன்று அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியின் போது முக்கியமான கட்டத்தில் நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழந்த விதம் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது.

ஏனெனில் எப்போதுமே விக்கெட் கீப்பிங்கில் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து தோனி பலமுறை பவுலர்களுக்கு ஆலோசனை வழங்கி விக்கெட்டுகள் விழுந்துள்ளதை நாம் கண்டுள்ளோம். அந்த வகையில் இந்த போட்டியிலும் ரிஷப் பண்ட் தோனியை போலவே பேட்ஸ்மேனின் மனநிலையை அறிந்து பவுலருக்கு அறிவுரை வழங்கி விக்கெட்டினை வீழ்த்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்தவகையில் யுஸ்வேந்திர சாஹல் வீசிய ஒரு ஓவரின் முதல் பந்தில் கிளென் பிலிப்ஸ் பிரம்மாண்டமான சிக்சர் ஒன்றினை விளாசினார். அதனை கவனித்த ரிஷப் பண்ட் அதற்கடுத்த மூன்றாவது பந்தில் சாஹலிடம் பந்தை ஸ்லோவாகவும், முன்கூட்டியே பிட்ச் செய்து அனுப்புமாறும் கூறினார். அதன்படியே பந்துவீசிய சாஹல் பந்தினை பொறுமையாகவும் முன்கூட்டியே பிட்ச் செய்து வீசினார்.

இதையும் படிங்க : நான் கேப்டனாக இருக்க முடியல. சாரி மன்னிச்சிடுங்க. ராஜினாமா செய்த நிக்கோலஸ் பூரான் – புதிய கேப்டன் யார் தெரியுமா?

அந்த பந்தை எதிர்கொண்ட பிலிப்ஸ் அடிக்க முயன்று கிளீன் போல்ட் ஆனார். இதனைக் கண்ட வர்ணனையாளர்கள் ரிஷப் பண்ட் கொடுத்த ஐடியா அப்படியே விக்கெட்டை பெற்றுக் கொடுத்திருக்கிறது. தோனி போலவே அவர் பேட்ஸ்மேனின் மனநிலையை அறிந்து பவுலருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என்று நேரலையில் பாராட்டினார்கள். இது குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement