நான் கேப்டனாக இருக்க முடியல. சாரி மன்னிச்சிடுங்க. ராஜினாமா செய்த நிக்கோலஸ் பூரான் – புதிய கேப்டன் யார் தெரியுமா?

Nicholas-Pooran
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான கைரன் பொல்லார்டு அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்தார். அதன் பிறகு பொல்லார்டிடம் இருந்த கேப்டன் பதவி நிக்கலஸ் பூரானிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி கடந்த மே மாதம் முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியை தலைமை தாங்கி வரும் நிக்கலஸ் பூரான் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 15 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு நான்கு வெற்றிகளையும், 15 டி20 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்துள்ளார்.

Pooran-1

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரே தோல்வியை சந்தித்து சூப்பர் 12 சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் தகுதி சுற்றிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முறை சாம்பியனாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற இந்த மாபெரும் சறுக்கல் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நிக்கலஸ் பூரான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் என்னிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தபோது மிகவும் பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். அதேபோன்று என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக எனது கேப்டன்சியில் எதுவும் சரியாக நடைபெறவில்லை.

Pooran

எனவே தற்போது நான் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறுவதாக முடிவு செய்துள்ளேன். நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதுக்கு காரணம் யாதெனில் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இனி வரும் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு ஒரு வீரராக நான் பங்களிக்க வேண்டும் அதில் கவனத்தில் செலுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறி உள்ளதாக பூரான் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கடைசியாக அவர் விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் வெறும் 94 ரன்கள் மட்டுமே குவித்துள்ளதாலும், மேலும் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் வெறும் 25 ரகளை மட்டுமே அவர் மூன்று போட்டிகளில் குவித்ததாலும் இனி பேட்டிங்கில் கவனம் செலுத்தவே அவர் இந்த கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒரே சச்சின் போல ஒரு சுழன்றடிக்கும் சூரியகுமார் யாதவின் – இதுவரை வியக்க வைத்த 5 சிறந்த ஷாட்கள் வீடியோவுடன் உள்ளே

அதே வேளையில் நிக்கலஸ் பூரான் கேப்டன் பதிவிலிருந்து வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக ரோவ்மன் பவல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டி20 கிரிக்கெட்டின் கேப்டனாகவும், ஷாய் ஹோப் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார்கள் என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடப்பட்டது.

Advertisement