ஒரே சச்சின் போல ஒரு சுழன்றடிக்கும் சூரியகுமார் யாதவின் – இதுவரை வியக்க வைத்த 5 சிறந்த ஷாட்கள்

- Advertisement -

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்துடன் மும்பையை சேர்ந்த சூரியகுமார் யாதவ் 2010 முதல் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக போராடினார். ஆனாலும் 2017க்குப்பின் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட அவர் மனம் தளராமல் போராடியதன் பயனாக ஒரு வழியாக கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இருப்பினும் 20 வயதில் அறிமுகமாகும் வீரர்களுக்கு மத்தியில் தாமதமாக 30 வயதில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்ற அவர் அடுத்த ஒன்றரை வருடத்தில் உலகிலேயே நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக ஜொலிப்பார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஏனெனில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே டி20க்கு தேவையான அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விடும் சூப்பர் ஸ்டார் அணுகு முறையை பின்பற்றும் அவர் பெரும்பாலான போட்டிகளில் பெரிய ரன்களைக் குவித்து வரும் காரணத்தாலேயே இன்று நம்பர் ஒன் கிரிக்கெட் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். பொதுவாக பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் புத்தகத்தில் இருக்கும் டெக்னிக்கை பயன்படுத்தி அதாவது ஆர்த்தோடாக்ஸ் முறையில் விளையாடுவார்கள். தோனியை போன்ற சிலர் அன்ஆர்த்தோடாக்ஸ் அதாவது இயற்கையாக தங்களுக்கு வரும் டெக்னிக்கை பயன்படுத்தி அசத்துவார்கள்.

- Advertisement -

ஒரே சச்சின், ஒரே சூர்யா:
அந்த வகையில் பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் அதை மைதானத்தின் நாலாபுறமும் சுழன்றடிக்கும் சூர்யகுமாரை ரசிகர்கள் மற்றும் ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்ளும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று போற்றுகிறார்கள். மேலும் ஒரே சச்சின், ஒரே தோனி, ஒரே விராட் கோலி என்ற வரிசையில் ஒரே சூரியகுமார் எனப் போற்றும் அளவுக்கு அதிரடியாக விளையாடுவதிலும் வித்தியாசமான ஷாட்களை அடிப்பதிலும் அவர் தனித்துவமாக திகழ்கிறார். இந்த சமயத்தில் இதுவரை அவர் விளையாடியுள்ள 5 வித்தியாசமான ஷாட்களை பற்றி பார்ப்போம்:

1. அறிமுகமே அமர்க்களம்: இன்று இப்படி அடிக்கும் சூரியகுமார் கடந்த 2021ஆம் ஆண்டு குஜராத் மாநில அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். அப்போட்டியில் 27/1 என்ற சூழ்நிலையில் களமிறங்கிய அவர் முதல் பந்திலேயே தற்சமயத்தில் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜோப்ரா ஆர்ச்சரை எதிர்கொண்டர்.

- Advertisement -

ஆனால் எதற்கும் அஞ்சாமல் ஷார்ட் லென்த்தில் நல்ல உயரத்தில் வந்த அந்த பந்தை அசால்ட்டாக லாங் லெக் திசையில் நடராஜர் ஷாட் போல சிக்ஸரை பறக்கவிட்ட சூரியகுமார் சூப்பர் ஸ்டார் வரப்போகிறார் என்பதை அப்போதே ரசிகர்களுக்கு சொல்லாமல் சொன்னார். அத்துடன் அப்போட்டியில் 57 (31) ரன்கள் குவித்த அவர் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற உதவி ஆட்டநாயகன் விருதை வென்று தனது கேரியரை அமர்க்களமாக தொடங்கினார்.

2. அசால்ட் சிக்ஸர்: நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் ரிச்சர்ட் ங்கரவா வீசிய ஒரு ஒயிட் யாரக்கர் பந்தை முன்னங்காலை முன்னோக்கி எடுத்துச் சென்று இழுத்து அடித்த அவர் ஸ்கொயர் லெக் திசையில் பறக்க விட்ட அற்புதமான சிக்சரை சிக்ஸரைப் பார்த்து ஐசிசி உட்பட அனைவருமே வியந்து போனார்கள்.

- Advertisement -

சேவாக் உட்பட அனைத்து முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டிய அந்த சிக்ஸருடன் சேர்த்து 61* (25) ரன்கள் குவித்த சூரியகுமார் இந்தியாவை 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

3. விளக்கின் உச்சம்: நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் நடைபெற்ற 2வது போட்டியில் லாக்கி பெர்குசன் வீசிய ஒரு பந்தை பவர் கொடுத்து அடித்த சூரியகுமார் தேர்ட் மேன் திசைக்கு மேலே ராட்சத மின்விளக்கை தொடும் அளவுக்கு இமாலய சிக்சராக பறக்க விட்டார்.

- Advertisement -

அதை எப்படி அடித்தார் என்று வியப்பு ஏற்பட்டாலும் பெர்குசன் வீசிய வேகத்திற்கு ஈடாக அவர் பேட்டை சுழற்றிய வேகத்துக்கும் திசைக்கும் கச்சிதமான டைமிங் கொடுத்ததால் அந்தப் பந்து எகிறி சென்றது. அப்போட்டியில் சதமடித்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை என்பதை வென்றார்.

4. சூர்யா ஹெலிகாப்டர்: தோனி ஹெலிகாப்டர் சிக்ஸர்களை அடிப்பதை போல் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ஒரு போட்டியில் அல்சாரி ஜோசப் வீசிய ஒரு பந்தில் (வீடியோவில் 1.30 நிமிடம்) தனது மணிக்கட்டை பயன்படுத்தி சூரியகுமார் அடித்த ஹெலிகாப்டர் சாட் யாராலும் மறக்க முடியாது.

5. ஃபிட்னஸ் ஷாட்: அதே போட்டியில் அதே அல்சாரி ஜோசப் வீசிய மற்றொரு பவுன்சர் பந்துக்கு கீழே அமர்ந்து விக்கெட் கீப்பருக்கு மேலே அவர் அடித்த பவுண்டரியையும் மறக்க முடியாது. அது அவருடைய பிட்னஸ் மற்றும் நொடிப் பொழுதில் பந்துக்கு தகுந்தார் போல் தம்மை மாற்றிக் கொள்ளும் திறமையை காட்டுகிறது.

Advertisement