இந்த தங்கத்தை உ.கோ டீம்ல எடுங்கய்யா.. இந்தியாவின் 2 உலக சாதனை வெற்றியில் அதிர்ஷ்ட தேவதையாக சுந்தர்.. ரசிகர்கள் வியப்பு

Washington Sundar
- Advertisement -

பரபரப்பான போட்டிகளுடன் நிறைவு பெற்ற ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அனலாக பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாமல் 50 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 17 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆரம்பத்திலேயே வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதைத் துரத்திய இந்தியாவுக்கு இசான் கிசான் 23*, கில் 27* ரன்கள் அடித்து 6.1 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்று கொடுத்தனர். முன்னதாக இத்தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான கடைசி சூப்பர் 4 போட்டியில் அக்சர் பட்டேல் காயத்தை சந்தித்ததால் ஃபைனலுக்கு முன்பாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் அழைக்கப்பட்டார்.

- Advertisement -

அதிர்ஷ்ட தேவதை சுந்தர்:
மேலும் ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் லெக் ஸ்பின் அல்லது இடது கை ஸ்பின்னர்களாக இருப்பதால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற கண்ணோட்டத்துடன் ஃபைனலில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் அவர் பெற்றார். ஆனால் முகமது சிராஜ் தனி ஒருவனாக போட்டியை முடித்ததால் அவருக்கு பேட்டிங் அல்லது பவுலிங் செய்வதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் அவர் இடம் பிடித்த இந்த போட்டியில் 263 பந்துகளை மீதம் வைத்து இலக்கை எட்டிப்பிடித்த இந்தியா உலகிலேயே ஒரு ஒருநாள் தொடரின் ஃபைனலில் அதிக பந்துகள் மீதம் வைத்து வென்ற அணி என்ற உலக சாதனை படைத்தது. இப்போட்டியை தவிர்த்து கடைசியாக இலங்கைக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடினார்.

- Advertisement -

ஆனால் விராட் கோலி 166*, ரோஹித் 42, கில் 116 என முதன்மை பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுத்தது இந்தியா 390/5 குவிப்பதற்கு உதவியதால் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே போல பந்து வீச்சில் முகமது சிராஜ் 4, குல்தீப் 2, ஷமி 2 விக்கெட்களை எடுத்து இலங்கையை 73 ரன்களுக்கு சுருட்டியதால் அப்போட்டியில் அவருக்கு பந்து வீசுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: ஆசிய கோப்பையில் வேறு யாருமே படைக்காத சாதனை.. இந்தியாவின் கேப்டனாக 3 சரித்திரம் படைத்த ரோஹித் சர்மா

இருப்பினும் அப்போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற உலக சாதனை படைத்தது. அப்படி இந்த 2 முக்கியமான உலக சாதனை வெற்றிகளை பெற்ற போட்டிகளில் இந்திய அணியில் இடம் பிடித்த அவர் அதிர்ஷ்ட தேவதை போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் தற்போது ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்துகின்றனர். அதனால் இந்த தங்கத்தை தவறவிடாமல் 2023 உலகக்கோப்பை அணியில் பேக்-அப் வீரராகவாவது தேர்வு செய்யுமாறு ரசிகர்கள் கலகலப்பை வெளிப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement