ஐ.பி.எல் தொடரில் எந்த அணிக்காக டேவிட் வார்னர் விளையாடப்போகிறார் ? – அவரே அளித்த பதில் இதோ

Warner
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரை வென்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சென்னை அணி சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான 15-வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் எந்த அணியில் விளையாடுவார் ? என்பதே பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் தொடரின் பாதியில் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

அதன்பிறகு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் டேவிட் வார்னர் வெளியில் அமர்ந்து அந்த அணியை ஆதரித்து வந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்து உடனடியாக அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடர்நாயகன் விருதையும் பெற்று அசத்தி இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக அவர் வரும் ஐ.பி.எல் தொடரில் எந்த அணிக்காக விளையாட போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது. அதே போன்று அடுத்த ஆண்டு புதிதாக இணையவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகளில் ஒரு அணி அவரை வாங்கும் என்று எதிர்பார்த்த வேளையில் அவரை அந்த இரண்டு அணிகளுமே அணுகவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி சமூகவலைதள பக்கத்தில் ரசிகர்கள் ஒருவர் எழுப்பிய கேள்வியில் : வார்னர் ப்ரோ அடுத்த ஐபிஎல் தொடருக்கு உங்களது திட்டம் என்ன ? என்று கேட்டபோது அதற்கு பதில் அளித்த வார்னர் : ஆக்ஷனில் கலந்து கொள்வேன் என்று நினைப்பதாக பதிலை அளித்துள்ளார். இதன் மூலம் அவரை லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் அணுகவில்லை என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை டெஸ்ட் : இந்த ஆண்டில் முதல் நபராக மீண்டும் ஒரு சாதனை நிகழ்த்திய – சாதனை நாயகன் அஷ்வின்

அதே வேளையில் அவர் மெகா ஏலத்திற்கு செல்லும் பட்சத்தில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்றும் எந்த அணி தன்னை தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அந்த அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை மீண்டும் புதிய தொடக்கமாக அளிக்க உள்ளதாக வார்னர் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement