மும்பை டெஸ்ட் : இந்த ஆண்டில் முதல் நபராக மீண்டும் ஒரு சாதனை நிகழ்த்திய – சாதனை நாயகன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவரது டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான மைல்கல்லாக இந்த சாதனை பார்க்கப்படுகிறது.

ashwin 1

- Advertisement -

அந்த சாதனையை தகர்த்த அஷ்வின் தற்போது மும்பையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அதன்படி இந்த ஆண்டு மட்டும் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் இதுவரை 44 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மேலும் அவர் மும்பையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் எடுத்த 6 விக்கெட்டுகளோடு சேர்த்து இந்த ஆண்டு 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைப்பதுள்ளார். அதுமட்டுமின்றி நான்காவது முறையாக ஒரே ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

wicket

wickets

இதற்கு முன்னர் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் மற்றும் அஷ்வின் ஆகியோர் மூன்று முறை ஒரு ஆண்டில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டும் அஷ்வின் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதால் முதல் பந்துவீச்சாளராக 4 ஆண்டுகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் பிறந்த மும்பையிலேயே இந்த சாதனையை செய்ததில் மகிழ்ச்சி. ஆனால் ? – அஜாஸ் படேல் ஓபன்டாக்

மும்பை மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் அஷ்வின் இந்த சாதனையை படைத்து டெஸ்ட் வரலாற்றில் மீண்டும் தனது முத்திரையை பதித்துள்ளார். இதுவரை மும்பை மைதானத்தில் அஷ்வின் 36 விக்கெட்டுக்களை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement