நான் பிறந்த மும்பையிலேயே இந்த சாதனையை செய்ததில் மகிழ்ச்சி. ஆனால் ? – அஜாஸ் படேல் ஓபன்டாக்

Ajaz-1
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்று சாதனை நிகழ்த்திய அஜாஸ் படேலுக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தான் செய்த இந்த சாதனை குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : இன்றைய நாளை என்னுடைய வாழ்நாளில் மறக்க மாட்டேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு மிகச்சிறந்த நாள்.

Ajaz

இந்த சாதனையை செய்ததில் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அதுவும் எனது சொந்த ஊரான மும்பையிலேயே நான் நிகழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி. நிச்சயம் எனக்கு மட்டுமல்ல எனது குடும்பத்தினருக்கும் இது ஒரு சிறப்பான தருணம்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்த சாதனையை படைத்தது மகிழ்ச்சி என்றாலும், கொரோனா கட்டுப்பாடு காரணமாக எனது குடும்பத்தினர் இங்கு வரமுடியவில்லை, அது மட்டும் தான் சற்று வருத்தம். இந்த போட்டிக்கு முந்தைய நாள் இரவு நான் வான்கடே மைதானத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பெயர் இருக்கும் போர்டை பார்த்தேன்.

ajaz-3

டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட் எடுக்கும் பவுலர்களின் பெயரை அதில் பதித்து பெருமைப்படுத்தி உள்ளனர். அந்த போர்டை பார்க்கும் போது எனது பெயரும் அங்கு இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் இப்படி ஒரு சாதனையுடன் அந்த பட்டியலில் இடம்பெறுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : ஒரே இன்னிங்ஸ்சில் 10 விக்கெட்டையும் வீழ்த்திய அஜாஸ் படேல் – தவறவிட்டிருந்தா பாத்துக்கோங்க

இதற்கு முன்பு 10 விக்கெட்டுகளை வீழ்த்திய கும்ப்ளேவின் வீடியோவை நிறைய முறை பார்த்துள்ளேன். தற்போது நானும் அந்த சாதனையை படைத்ததற்காக அவர் என்னை வாழ்த்தியது நெகிழ வைத்தது. அவருடன் இந்த சாதனையில் பணிவோடு இணைகிறேன் என அஜாஸ் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement