ஒரே இன்னிங்ஸ்சில் 10 விக்கெட்டையும் வீழ்த்திய அஜாஸ் படேல் – தவறவிட்டிருந்தா பாத்துக்கோங்க

Ajaz
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 325 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 62 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 263 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணியானது தற்போது இரண்டாவது இன்னிங்சில் கிட்டத்தட்ட 500 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று உள்ளதால் இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது தற்போதே உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசிய நியூஸிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணியின் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வரலாற்றில் இடம் பிடித்தார்.

- Advertisement -

இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களாக ஜிம்மி லேக்கர் மற்றும் இந்திய அணியின் ஜாம்பவான் கும்ப்ளே ஆகியோர் மட்டுமே இருந்தனர். தற்போது அவர்கள் இருவருடன் சேர்ந்து நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலும் அந்த சாதனை பட்டியலில் இணைத்துள்ளார்.

அவரது இந்த சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது மட்டுமின்றி அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்து அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 10 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஜாஸ் படேலுக்கு வாழ்த்து கூறிய அனில் கும்ப்ளே – என்ன சொல்லியிருக்காரு ?

அதோடு சேர்த்து இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக ஒரு டெஸ்டில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement