10 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஜாஸ் படேலுக்கு வாழ்த்து கூறிய அனில் கும்ப்ளே – என்ன சொல்லியிருக்காரு ?

Kumble
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை மைதானத்தில் கடந்த 3 ஆம் தேதி துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று மூன்றாம் நாளை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணியானது 325 ரன்கள் குவிக்க இந்த முதலாவது இன்னிங்சில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அஜாஸ் படேல் வரலாற்று சாதனையை நிகழ்த்தினார். அவரது இந்த சாதனைக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த போட்டியில் 47.5 ஓவர்கள் வீசி அவர் 119 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனையில் இடம் பிடித்தார். இவருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களாக ஜிம்மி லேக்கர் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் உள்ளனர். நியூசிலாந்து அணி சார்பாக முதல் நபராக அஜாஸ் படேல் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே 1999ஆம் ஆண்டு டெல்லி மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 74 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது 22 ஆண்டுகள் கழித்து மும்பையில் பிறந்த இந்திய பூர்வீகத்தை சேர்ந்த அஜாஸ் படேல் அதே மும்பை மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணி சார்பாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் அவரது இந்த சாதனையை பாராட்டியுள்ள அனில் கும்ப்ளே தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வாழ்த்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது :

“வெல்கம் டூ த கிளப்” சிறப்பாக பந்து வீசினார்கள். முதல் நாள் மற்றும் இரண்டாவது நாளில் உங்களது அற்புதமான முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என்று அவரது 10 விக்கெட் சாதனையை பாராட்டி கும்ப்ளே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கும்ப்ளே மட்டுமின்றி அனைத்து அணிகளின் முன்னணி வீரர்கள் பலரும் அஜாஸ் படேலின் இந்த சாதனைக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement