100 சதங்களை அடிக்க வேண்டுமெனில் அந்த தியாகத்தை செய்யுங்க – விராட் கோலிக்கு சோயிப் அக்தர் கோரிக்கை

- Advertisement -

2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள விராட் கோலி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு மாதம் ஓய்வெடுத்து நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் புத்துணர்ச்சியுடன் விளையாடி வருகிறார். அதில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 35 ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றிய அவர் ஹாங்காங்க்கு எதிரான 2வது போட்டியில் தடுமாறாமல் 59* (43) ரன்கள் குவித்து வெற்றி பெற உதவினார். அதை தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் மீண்டும் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக எஞ்சிய பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது மீண்டும் அசத்தலாக பேட்டிங் செய்த அவர் 60 ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடினார்.

- Advertisement -

இதே போலவே பார்ம் அவுட்டாகி விட்டார் என்று அனைவரும் கூறும் 2019க்குப்பின் அவ்வப்போது 50, 70 போன்ற நல்ல ரன்களை எடுத்து வரும் அவர் அந்த காலகட்டத்தில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இடம்பிடித்து முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறார். ஆனாலும் கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் ரன் மெஷினாக எதிரணிகளை வெளுத்து வாங்கிய அவர் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து களமிறங்கினால் சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு தனக்கென்று தங்கமான தரத்தை உருவாக்கியுள்ளார்.

100 சதங்கள்:
தற்போது அந்த தங்கமான தரத்திற்கு ஈடாக செயல்படாமல் சாதாரண வீரரைப் போல செயல்படுவதால் சதமடிக்கவில்லை என்ற காரணத்தை வைத்து அவரை அணியிலிருந்து நீக்குமாறு நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் விமர்சித்துள்ளார்கள். இருப்பினும் 10 வருடங்களாக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டதால் ஏற்பட்ட பணிச்சுமை தற்போது அவருடைய பிரம்மாண்ட கேரியரில் மெகா வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஒரு கட்டத்தில் 31 வயதிலேயே 70 சதங்களை அடித்த அவர் சச்சினின் 100 சதங்கள் உலக சாதனையை எளிதாக உடைப்பார் என்று கருதப்பட்ட நிலையில் தற்போது அது கடினமாக மாறியுள்ளது.

Kohli

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பையில் ஓரளவு நல்ல பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி எஞ்சிய கேரியரில் மேற்கொண்டு இதை அப்படியே தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பதை பார்க்க விரும்புவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார். அதற்காக பணிச்சுமையை நிர்வகிக்க டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும் முடிவை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி பந்துகளை பேட்டின் மையப்பகுதியிலிருந்து அடிக்க தடுமாறுகிறார். இந்த ஆசிய கோப்பையில் இதுவரை அவர் விளையாடிய எந்த இன்னிங்சும் தெளிவாக இல்லை. அவருக்கு என்னுடைய ஒரே பரிந்துரை என்னவெனில் இந்த டி20 உலகக் கோப்பை வரை காத்திருங்கள். அதன்பின் டி20 கிரிக்கெட் உங்களுக்கு பொருந்தினாலும் பொருந்தா விட்டாலும் மேற்கொண்டு நீங்கள் 30 சதங்களை அடிக்க வேண்டும்”

Kohli and Akhtar

“அதற்கு நீங்கள் உங்களையே சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்து வரும் 30 சதங்கள் மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. எனவே பெரிய கிரிக்கெட்டில் (டெஸ்ட் மற்றும் ஒருநாள்) நீங்கள் விளையாடும்போது செட்டிலாகி விளையாட அதிகமான நேரம் கிடைக்கும். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட முயற்சிக்கும் உங்களால் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டை கட்டுக்குள் வைத்து அணியின் வெற்றியை பாதுகாக்க வேண்டியுள்ளது. இருப்பினும் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிக்க விரும்புகிறேன். தற்சமயத்தில் அந்த சாதனை அசாத்தியமாக தோன்றுகிறது. ஆனால் அது விராட் கோலியால் மட்டுமே முடியும்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடினால் சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் சோயப் அக்தர் அதை தாம் பார்க்க விரும்புவதாகவும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : INDvsSL : நாங்கள் பெற்ற இந்த சிறப்பான வெற்றிக்கு முழுக்க முழுக்க இவர்களே காரணம் – இலங்கை கேப்டன் ஹேப்பி

அவர் கூறுவது போல இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்களையும் அடித்துள்ள விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இதுவரை சதமடித்ததே கிடையாது. எனவே ஏற்கனவே பணிச்சுமையால் நிறைய பாதிக்கப்பட்டுள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் 100 சதங்களை அடிக்க அதிகமாக வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement