INDvsSL : நாங்கள் பெற்ற இந்த சிறப்பான வெற்றிக்கு முழுக்க முழுக்க இவர்களே காரணம் – இலங்கை கேப்டன் ஹேப்பி

Shanaka
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 4 அணிகள் “சூப்பர் 4” சுற்றுக்கு தகுதி பெற்று தற்போது சூப்பர் 4 சுற்றில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணி இந்த “சூப்பர் 4” சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த வேளையில் நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறியுள்ளது.

Arshdeep-Singh

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்தது. பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 19.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஏற்கனவே இந்த “சூப்பர் 4” சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணியானது தற்போது இந்திய அணியையும் அபாரமாக வீழ்த்தியுள்ளதால் இறுதிப் போட்டியில் தற்போதே ஒரு காலை வைத்துவிட்டது என்று கூறவேண்டும். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற இந்த சிறப்பான வெற்றிக்கான காரணம் குறித்து போட்டி முடிந்து பேட்டியளித்த இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறுகையில் :

IND vs SL Arsheep Singh

எங்கள் அணியில் உள்ள நல்ல சூழ்நிலைதான் எங்களுக்கு தற்போது நல்ல சாதகத்தை அளித்து வருகிறது. நாங்கள் அனைவரும் நல்ல மனநிலையுடன் இருப்பது எங்களுக்கு நல்ல நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்த முழுக்க முழுக்க எங்களது அணியின் பேட்ஸ்மேன்களே காரணம். ஏனெனில் இந்தியா ஒரு நல்ல ரன் குவிப்பை வழங்கி இருந்தாலும் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் எந்த இடத்திலும் நம்பிக்கையை விடாமல் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று கொடுத்துள்ளனர்.

- Advertisement -

பந்துவீச்சாளர்கள் இடையிடையே மிகச் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதல் பத்து ஓவர்களில் இந்திய அணி மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த வேளையில் அடுத்ததாக அவர்களை 173 ரன்களில் நிறுத்தியது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அதோடு இந்த போட்டியில் எங்களது அணியின் துவக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் குஷால் மென்டிஸ் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை எங்களுக்கு அளித்தனர்.

இதையும் படிங்க : மிஸ் யூ மிஸ்டர் ஐபிஎல் – யாராலும் எளிதில் தகர்க்க முடியாத சுரேஷ் ரெய்னாவின் 5 சூப்பர் சாதனைகளின் பட்டியல்

அவர்கள் கொடுத்த அந்த துவக்கத்தை அப்படியே கொண்டு சென்று இறுதியில் வெற்றியும் பெற்றுள்ளோம். ராஜபக்சே இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நான் பங்களித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இன்றைய போட்டியில் நான் முழுவதுமாக பந்துவீசாததற்கு காரணம் யாதெனில் மற்ற பவுலர்கள் போதுமான ஓவர்களை வீசியதால் நான் என்னுடைய முழு ஓவர்களையும் வீசமுடியாமல் போனது என ஷனகா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement