லோயர் மிடில் ஆர்டரை தோனியை போல் ஆள விரும்புகிறேன், அவரை மாதிரி வருவேன் – இளம் வீரர் நம்பிக்கை

MS Dhoni Riyan Parag
- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் 10 ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வருடத்திலேயே சொந்த மண்ணில் ராஜஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்று அசத்தியது. மறுபுறம் சஞ்சு சாம்சன் தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய ராஜஸ்தான் 13 வருடங்கள் கழித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற போதிலும் பைனலில் டாஸ் வென்று பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு 2-வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அந்த அணிக்கு பேட்டிங்கில் பெரும்பாலும் இங்கிலாந்தின் நட்சத்திரம் ஜோஸ் பட்லர் தடுமாறிய இதர பேட்ஸ்மேன்களுக்கு சேர்த்து அற்புதமாக பேட்டிங் செய்து மொத்தம் 863 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

Riyan Parag 56.jpeg

- Advertisement -

அந்த அணியின் இந்த தோல்விக்கு லோயர் மிடில் ஆர்டரில் நல்ல பேட்ஸ்மேன்கள் இல்லாதது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக அந்த இடத்தில் அந்த அணிக்காக கடந்த 2019 முதல் விளையாடி வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம் வீரர் ரியான் பராக் ஏராளமான வாய்ப்புகள் கிடைத்த போதிலும் சுமாரான அளவில் கூட ரன்கள் எடுக்காதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

சேட்டையான பராக்:
17 வயதில் ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரில் அறிமுகமான அவர் சுமாராக செயல்பட்ட போதிலும் இந்த வருடம் 3.80 கோடி என்ற பெரிய தொகைக்கு ராஜஸ்தான் அவரை மீண்டும் வாங்கியது. ஆனால் பங்கேற்ற 17 போட்டிகளில் வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் மொத்தமாக விளையாடிய 4 வருடங்களில் 37 இன்னிங்ஸ்சில் வெறும் 522 ரன்களை 16.84 என்ற தரைமட்டமான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். இந்த 4 வருடங்களில் வெறும் 2 அரை சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதனாலேயே இந்த தொடரில் இவரை நம்பாமல் அவருக்கு முன்பாக அஷ்வினை ராஜஸ்தான் அணி நிர்வாகம் பேட்டிங் செய்ய களமிறக்கியது.

Harshal Patel Riyan Parag Fight

இந்த வயதில் பெரிய அளவில் ரன்கள் சேர்த்தது தவறில்லை என்றாலும் களத்தில் வயதிற்கு மீறிய செயலில் அவர் ஈடுபடுவதுதான் அனைவருக்கும் கடுப்பாக வைக்கிறது. அதிலும் சரியான தீர்ப்பை வழங்கிய அம்பயரை என்னமோ அநீதி இழைத்ததுபோல் கலாய்த்தது, அதற்காக இந்த வயதில் அவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்கிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹைடனை மறைமுகமாக கலாய்த்தது, சீனியர்கள் என்றும் பாராமல் ஹர்ஷல் படேல் போன்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது என சமீப காலங்களில் இவரின் கர்வமான சேட்டைகள் ஏராளமாக அரங்கேறின.

- Advertisement -

தோனி மாதிரி:
ஆனால் என்னமோ உலக சாதனை படைத்தது போல் டுவிட்டரில் திமிராகப் பேசும் இவரிடம் “முதலில் செயலில் காட்டுங்கள், அதன்பின் வாய் பேசுங்கள்” என்று வெளிப்படையாகவே ரசிகர்கள் பலமுறை சவால் விடுத்து விட்டனர். ஆனாலும் திருந்தாத இவர் வரும் காலங்களில் ஐபிஎல் தொடரில் 6 – 7 ஆகிய பேட்டிங் இடங்களான லோயர் மிடில் ஆர்டரில் அபாரமாக செயல்பட்டு முன்னாள் கேப்டன் தோனியை போல் பினிஷராக வர விரும்புவதாக தற்போது தெரிவித்துள்ளார்.

Dhoni 1

அதுபோல் செயல்பட்டால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தாமாக தேடி வரும் என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் நிறைய கற்று வருகிறேன். 6, 7 ஆகிய பேட்டிங் இடங்கள் எளிதானது கிடையாது. அனைவரும் வந்ததும் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வாறு வேலை செய்யாது. ஒருசில இன்னிங்ஸ்களில் விளையாடிய நான் அதை சிறப்பாக செய்திருக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே கூறியது போல் நான் நிறைய கற்க வேண்டியுள்ளது. நான் தற்போது பேட்டிங் செய்யும் இடத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் எனது செயல்பாடுகளில் மகிழ்ச்சி அடையவில்லை”

- Advertisement -

“நான் 6, 7 ஆகிய பேட்டிங் இடங்களை ஆள விரும்புகிறேன். உலகிலேயே அதை செய்தது எம்எஸ் தோனி மட்டும்தான். அவரை தவிர வேறு யாரும் எனது மனதில் தோன்றவில்லை. எனவே இதுவரை கற்ற அனுபவங்களை வரும் வருடங்களில் செயல் படுத்த உள்ளேன். இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் வெற்றி பெற விரும்புகிறேன். இதுநாள் வரை ஒருசில போட்டிகளை வென்றிருந்தாலும் அது போதாது. எனது அணிக்கு 6 – 7 போட்டியில் வென்றால் தான் என்னுடைய செயல்பாடு எனக்கே அடையாளம் தெரியும். மேலும் இந்திய உத்தேச அணியில் இடம்பெறுவது எனக்கு பிடிக்காது. அதற்கு நான் தகுதியானவன் கிடையாது. வரும் வருடங்களில் எனது அணிக்காக நிறைய போட்டிகளை வென்றால் என்னுடைய தன்னம்பிக்கையும் செயல்பாடுகளும் முன்னேற்றமடையும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : 30 வயசாகிடுச்சு உங்களுக்கு இடமில்லை ! இந்திய தேர்வு குழுவின் கோர முகத்தால் வேதனையில் இந்திய வீரர்

இந்தியாவுக்கு 2018 அண்டர்-19 உலக கோப்பையில் இடம் பிடித்திருந்த இவர் இந்திய அணிக்காக நேரடியாக 11 பேர் அணியில் விளையாடும் தகுதி பெற்றுள்ள தமக்கு பெயருக்காக தேர்வாகி பெஞ்சில் அமர்வதை விரும்பவில்லை என்று கூறுகிறார். எனவே வரும் காலங்களில் எம்எஸ் தோனியை போல் மிடில் ஆர்டரில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்காக நேரடியாக விளையாடி நிறைய போட்டிகளை வென்று கொடுக்கும் அளவுக்கு முன்னேற உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement