30 வயசாகிடுச்சு உங்களுக்கு இடமில்லை ! இந்திய தேர்வு குழுவின் கோர முகத்தால் வேதனையில் இந்திய வீரர்

Sheldon
- Advertisement -

உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியா இன்று உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிப்பதற்கு தேவையான தரமான வீரர்களை இங்கு நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் உருவாக்கிக் கொடுப்பதே முக்கிய காரணமாகும். சொல்லப்போனால் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக கடந்த 1934இல் துவங்கப்பட்ட ரஞ்சி கோப்பை தான் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வருகையால் அதற்கும் தரமான வீரர்களை உருவாக்கும் வகையில் விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி போன்ற வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர்களும் உருவாக்கப்பட்டன.

Ranji Trophy

- Advertisement -

அதனால் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமெனில் ஒரு வீரர் முதலில் மேற்குறிப்பிட்ட உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயமாகும். அதேபோல் தேர்வு குழுவினரும் உள்ளூர் கிரிக்கெட்டில் குறிப்பாக ரஞ்சி கோப்பையில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களைத்தான் மரியாதை கொடுத்து தேர்வு செய்ய்யும் நடைமுறை தான் இந்திய கிரிக்கெட்டில் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களின் மவுசு குறையத் துவங்கியது.

கோரமான தேர்வுக்குழு:
தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே ரஞ்சி கோப்பை போன்ற தொடர்களை புறந்தள்ளி புகழின் உச்சியை ஐபிஎல் தொட்டுள்ளது. அதே மாதிரிதான் சமீப காலங்களில் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படும் வீரர்களை யாரும் கண்டுகொள்ளாத நிலையும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களை ஹீரோக்களாக பார்க்கும் நிலையும் தற்போது உருவாகியுள்ளது. ரசிகர்கள் அவ்வாறு பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சமீப காலங்களில் இந்திய தேர்வு குழுவினரே ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தான் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் தேர்வு செய்ய தொடங்கிவிட்டனர் என்பது வேதனையாகும்.

எடுத்துக்காட்டாக கடந்த ஐபிஎல் தொடரில் அசத்திய ருதுராஜ் கைக்வாட், இந்த ஐபிஎல் தொடரில் அசத்திய உம்ரான் மாலிக் போன்றவர்களை கூறலாம். அது தவறில்லை என்றாலும் ரஞ்சி கோப்பையில் பல வருடங்கள் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வு குழுவினர் கண்டு கொள்ளாதது தான் நியாயமற்றதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக கடந்த 2 வருடங்களில் 14 இன்னிங்ஸ்சில் 6 சதம் 3 இரட்டை சதம் உட்பட 1664 ரன்களை மலை போலக் குவித்து வரும் சர்பராஸ் கானை கூறலாம்.

- Advertisement -

30 வயசாகிடுச்சு:
இதுபோக தற்போதைய இந்திய அணியில் நல்ல உடல் தகுதியுடன் இளமையாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டமும் உருவாகியுள்ளது. இந்நிலையில் உங்களுக்கு 30 வயது கடந்துவிட்டதால் இந்திய அணியில் வாய்ப்பில்லை என்று தமக்கு தேர்வுக்குழுவினர் வாய்ப்பு தர மறுப்பதாக சௌராஷ்டிரா அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் செல்டன் ஜாக்சன் வேதனை தெரிவித்துள்ளார். தற்போது 35 வயது கடந்துள்ள அவர் 79 முதல் தரப் போட்டிகளில் 5947 ரன்களை 50.39 என்ற நல்ல சராசரியில் எடுத்து கடந்த பல வருடங்களாக இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

Sheldon 1

ஆனால் அதே சமயம் 32 வயதை கடந்த மற்றொரு வீரருக்கு தேர்வு குழுவினர் வாய்ப்பளித்ததாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இது இப்போது மட்டும் நடக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து நடக்கிறது. நான் எடுத்த ரன்களை எடுத்த காலகட்டத்தில் நம் நாட்டில் நிறைய பேர் எடுக்கவில்லை. 75 போட்டிகளில் சுமார் 6000 ரன்களை எடுத்துள்ளதை பார்த்தால் நான் எவ்வளவு கடினமாக உழைத்துள்ளேன் என்பது உங்களுக்குப் புரியும்”

- Advertisement -

“மேலும் தேர்வு பற்றி யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. ஒருமுறை நான் தாமாக முன்வந்து கேட்டபோது தேர்வு குழுவினர் வயதாகி விட்டதாக பதிலளித்தனர். அதாவது 30 வயதை கடந்த யாரையும் நாங்கள் தேர்வு செய்வதில்லை என்று கூறினர். ஆனால் அடுத்த வருடமே 32 – 33 வயது நிரம்பிய ஒருவரை தேர்வு செய்தனர். நீங்கள் 30, 35, 40 வயதுக்கு மேல் இருந்தால் தேர்வு செய்யக்கூடாது என்று ஏதேனும் சட்டம் உள்ளதா? இல்லையெனில் நீங்கள் ஏன் ஒரு சட்டத்தை கொண்டு வரக்கூடாது” என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Sheldon

இதுபோக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 67 போட்டிகளில் 2346 ரன்களை எடுத்துள்ள அவர் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு சுமாராக செயல்பட்டதால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். ஒருவேளை ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் தேர்வுக்குழு ஒதுக்குகிறதா என்றும் தெரியவில்லை. ஆனாலும் மனம் தளராமல் விளையாடி வருகிறேன் என்று அவர் மேலும் கூறியது பின்வருமாறு. “ஒவ்வொரு வருடமும் வாய்ப்பு கிடைக்காமல் கடந்து செல்வது கடினமாக உள்ளது.

இதையும் படிங்க : IND vs RSA : யார் சொல்றதையும் கேக்க முடியாது. டாஸின் போதே தில்லான முடிவை கையில் எடுத்த – ரிஷப் பண்ட்

ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன்களை அடிப்பது கடினமாகும். ஆனால் எந்த அளவுக்கு நீங்கள் என்னை புறக்கணிக்கிறார்களோ அந்த அளவுக்கு மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளேன். நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு கிடைத்துள்ள நல்ல பயிற்சியாளர்கள் இன்னும் ஒரு வருடம் காத்திரு என்று எனக்கு தொடர்ந்து உத்வேகம் கொடுத்து கொண்டே வருகிறார்கள்” என்று கூறினார்.

Advertisement