IND vs RSA : யார் சொல்றதையும் கேக்க முடியாது. டாஸின் போதே தில்லான முடிவை கையில் எடுத்த – ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரில் 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsRSA

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா முதலில் பந்து வீசுவதாகவும் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணிதான் விளையாடுகிறது என்றும் அறிவித்தார். அதன்காரணமாக தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது.

இந்நிலையில் ஏற்கனவே கடந்த இரண்டு போட்டிகளாக மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணியில் நிச்சயம் பந்துவீச்சு துறையில் ஏதாவது ஒரு மாற்றம் இருக்கும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் அப்படி எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி தான் இந்த போட்டியில் விளையாடுகிறது என்று ரிஷப் பண்ட் டாசின் போதே அறிவித்தார்.

toss

ஏற்கனவே இந்திய அணி முதல் போட்டியில் 211 ரன்கள் குவித்தும் அந்த இலக்கிற்குள் தென் ஆப்பிரிக்க அணியை கட்டுப்படுத்த முடியாததும், கடந்த இரண்டாவது போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாலும் இந்திய அணியில் இருந்து யாராவது ஒருவர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் அல்லது அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரில் ஒருவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் எந்தவொரு மாற்றத்தையும் செய்யாமல் அதே அணியுடன் களம் இறங்குவதாக தைரியமான முடிவை எடுத்துள்ளார். இன்றைய போட்டியிலும் இந்திய அணி தோற்கும் பட்சத்தில் இத்தொடரை தென் ஆப்பிரிக்க அணியிடம் இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஐ.சி.சி வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை – இந்திய அணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

1) இஷான் கிஷன், 2) ருதுராஜ் கெய்க்வாட், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) ரிஷப் பண்ட், 5) ஹார்திக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) அக்சர் படேல், 8) ஹர்ஷல் படேல், 9) புவனேஷ்வர் குமார், 10) ஆவேஷ் கான், 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement