ஐ.சி.சி வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை – இந்திய அணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

INDvsPAK
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அப்போது நடைபெற்று முடியும் கிரிக்கெட் தொடர்களின் முடிவில் சிறப்பாக செயல்படும் அணிகள், வீரர்கள் மற்றும் அனைத்து வகையான தரவரிசைப் பட்டியலையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிவடைந்த பிறகு ஐசிசி இந்த புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதன் காரணமாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் தற்போது பாகிஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் நல்ல முன்னேற்றத்தை கண்டு இந்திய அணியை பின்னுக்கு தள்ளியுள்ளது. அப்படி ஐசிசி வெளியிட்டுள்ள இந்த ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தர வரிசை பட்டியலில் 125 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், 124 புள்ளிகளுடன் இங்கிலாந்து 2வது இடத்திலும் உள்ளது.

INDvsPAK

107 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் புள்ளி பட்டியலில் இந்திய அணியானது 105 புள்ளிகளுடன் 5-வது இடத்தையே பிடித்துள்ளது. அதே வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணியானது 106 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs RSA : 3 ஆவது டி20 போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

ஐசிசி வெளியிட்டுள்ள இந்த புள்ளி பட்டியலில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியை பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியானது தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement