தோனி மற்றும் சிஎஸ்கே குடும்பத்தை பெருமையடைய வைப்பேன்.. அண்டர்-19 இந்திய வீரர் அவனிஷ் பேட்டி

- Advertisement -

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் நடப்புச் சாம்பியன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. அப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா 6வது முறையாக கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணிக்காக முஷீர் கான் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர். அந்த வரிசையில் இத்தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக 18 வயதாகும் ஆரவல்லி அவனிஷ் ராவ் மிடில் ஆர்டரில் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

- Advertisement -

தோனி அணியில்:
உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவதால் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஏலத்தில் கடைசி நேரத்தில் அவர் 20 லட்சம் என்ற அடிப்படை தொகைக்கு வாங்கப்பட்டார். இந்நிலையில் விரைவில் சென்னை அணிக்காக விளையாடி எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்களை பெருமையடைய வைப்பேன் என்று ஆரவல்லி அவனிஷ் கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சென்னை அணிக்காக நான் தேர்வு செய்யப்பட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதை நான் புரிந்து கொள்வதற்கு நீண்ட நேரமானது. அன்றைய நாளில் நான் வீட்டில் இருந்த போது எங்களுடைய அலைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. நான் தோனி சார் மற்றும் சிஎஸ்கே குடும்பத்தை பெருமைடைய வைக்க விரும்புகிறேன்”

- Advertisement -

“தற்போது என்னுடைய மனதில் ஐபிஎல் பற்றிய எண்ணங்கள் இல்லை. அண்டர்-19 உலகக் கோப்பை முடிந்த பின் அத்தொடரைப் பற்றி சிந்திக்க உள்ளேன். இருப்பினும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவது ஒவ்வொரு வீரர்களின் கனவாக இருக்கும். சிறு வயதில் இருந்தே நான் கிரிக்கெட்டராக வர விரும்பினேன்”

இதையும் படிங்க: பேசாம இந்திய கிரிக்கெட்டின் அந்த ஆணிவேரை அழிச்சுடுங்க.. பிசிசிஐக்கு மனோஜ் திவாரி வேதனையான கோரிக்கை

“என்னுடைய அப்பா கிரிக்கெட்டை விரும்பி பார்ப்பார். அப்போது அவருடன் நான் உட்கார்ந்து பார்ப்பேன். அப்படித்தான் எனக்குள் அந்த ஆர்வம் வந்தது. மேலும் தோனி அவர்களிடமிருந்து கடினமான சூழ்நிலையில் எப்படி அசத்துவது என்பதை பற்றி கற்றுக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக 2011 உலகக் கோப்பை ஃபைனல் இன்னிங்ஸ் போல அவரிடம் நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய அம்சங்கள் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement