நல்ல பிளேயரே அவர் ஒருத்தர் தான். அவரும் விலகிட்டாரா? – அப்போ இந்திய அணியின் வெற்றி உறுதி

sl
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இந்தியாவில் நடைபெற உள்ளது. நாளை துவங்க இருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அணியில் இருந்து முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆகியோர் ஓய்வு எடுத்துக் கொண்டனர்.

INDvsSL

- Advertisement -

அதேபோன்று இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே காயத்தால் வெளியேறிய அக்சர் பட்டேல், கேஎல் ராகுல் மற்றும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடிக்கவில்லை. அதோடு தற்போது மேலும் இரண்டு வீரர்களாக தீபக் சாஹர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக இந்த டி20 தொடரை தவறவிட்டுள்ளனர்.

இப்படி இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து இந்த தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பல வீரர்களுக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எது எப்படி இருப்பினும் இப்போதைய கணக்கில் இந்திய அணி சற்று இலங்கை அணியை விட பலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது.

hasaranga 1

இந்நிலையில் தற்போது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பவுலருமான வணிந்து ஹசரங்கா ஆஸ்திரேலிய தொடரின் போது கொரோனா தொற்றால் பாதிப்படைந்த பின்னர் இன்னும் அந்த தொற்றில் இருந்து முழுவதுமாக மீளாததால் இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை இழந்தது இலங்கை அணியானது தற்போது அவரையும் இழந்துள்ளது அந்த ஏற்பட்டுள்ள பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அவரு உண்மையிலேயே செம டேலன்ட்டான பிளேயர். நிச்சயம் உ.கோ அணியில் அவர் இருப்பாரு – ரோஹித் உறுதி

மேலும் ஹசரங்காவிற்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தடுமாறி வரும் வேளையில் அவர் இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலம் என்றும் தற்போதே இந்த விடயம் வெற்றியை உறுதி செய்துள்ளது என்ற அளவிற்கு பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement