அவரு உண்மையிலேயே செம டேலன்ட்டான பிளேயர். நிச்சயம் உ.கோ அணியில் அவர் இருப்பாரு – ரோஹித் உறுதி

Rohith
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறியது. அதைத் தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி வெளியேற புதிய கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் தற்போது நடைபெற்று முடிந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடர் என இரண்டையும் அசத்தலாக கைப்பற்றியுள்ள இந்திய அணியானது அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

Bishnoi

- Advertisement -

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் போட்டிகள் நடைபெற இருப்பதால் அதனை கணக்கில் கொண்டு தற்போது இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுழற்சி முறையில் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு சரியான இந்திய அணியை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்வோம் என்று பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் உறுதியுடன் உள்ளனர்.

இந்நிலையில் இந்த இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் கோலி ஆகியோர் ஓய்வு காரணமாக வெளியேறி உள்ளதாலும், சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ளதாலும் அணியில் பல வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவரது இந்த வருகை குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் கூறுகையில் :

Samson-1

சஞ்சு சாம்சன் திறமை குறித்து உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடும் போதும் சரி, மற்றபடி விளையாடும் போதும் சரி அவருடைய இன்னிங்ஸ்கள் அனைத்தும் மிகப் பிரமாதமாக இருக்கும். அதிரடியாக விளையாடக்கூடிய அவரை இந்த இலங்கை தொடரிலும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவரிடம் நல்ல ஸ்கில் செட் இருக்கிறது அதோடு அவரிடம் நிறைய அட்டகாசமான ஷாட்டுகள் இருக்கின்றன.

- Advertisement -

எப்போதும் அணியின் ரன் ரேட்டை அதிகப்படுத்தும் விதமாக அவருடைய ஆட்டம் அமையும். அதிக அளவு திறமை உள்ளதாலேயே அவர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். நிச்சயம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை தொடரிலும் அவரது பெயர் இடம்பெறும் என்று ரோஹித் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சாம்சன் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன். அதோடு இளம் வீரர்கள் அனைவருமே தங்களுக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தங்களது முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க : கோல்டன் பூட்ஸ்ஸை பரிசாக வழங்கிய யுவ்ராஜ் சிங்கிற்கு விராட் கோலி கொடுத்த ரிப்ளை – என்ன தெரியுமா?

சுழற்சிமுறையில் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அவர்களது பணிச்சுமையை கவனிப்பது என அனைத்திலும் நாங்கள் சரியான திட்டம் வைத்துள்ளோம். நிச்சயம் அடுத்தடுத்து வரும் தொடர்களின் முடிவில் எங்களுக்கு ஒரு நல்ல உலக கோப்பை அணி செட்டாகும் என்று ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement