கோல்டன் பூட்ஸ்ஸை பரிசாக வழங்கிய யுவ்ராஜ் சிங்கிற்கு விராட் கோலி கொடுத்த ரிப்ளை – என்ன தெரியுமா?

Yuvi
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் பிப்ரவரி 22-ஆம் தேதி நேற்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு தங்கநிற பூட்ஸ்ஸினை பரிசாக அளித்தார். மேலும் அதோடு ஒரு கடிதத்தையும் பகிர்ந்த அவர் : டெல்லியில் இருந்து வந்த ஒரு சிறிய வாலிபரான நீங்கள் உங்களுக்குத்தான் இந்தப் பரிசு. இந்த ஸ்பெஷல் பூட்ஸ்ஸினை உனக்காக நான் பரிசளிக்கிறேன். உன்னுடைய கரியரில் நீ கேப்டனாக செயல்பட்டது பல கோடி ரசிகர்கள் முகத்தில் புன்னகையை வெளிக்கொண்டு வந்தது.

எந்த வழியில் இப்போது நீங்கள் பயணிக்கிறீர்களோ அந்த வழியிலேயே தொடர்ந்து செல்வாய் என்று நம்புகிறேன். இந்திய நாட்டை தொடர்ந்து நீ பெருமைப்படுத்த வேண்டும் என்று மனமுருக ஒரு கடிதத்தை விராட் கோலிக்காக யுவ்ராஜ் சிங் எழுதி இருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய விராட் கோலிக்கு இந்த பரிசினை தனது அன்பு பரிசாக யுவ்ராஜ் சிங் வழங்கி இருந்தார். இந்நிலையில் அவரது இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக விராட் கோலியும் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் யுவராஜ் சிங்கிற்கு நன்றி தெரிவித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : உங்களுடைய அன்பிற்கு நன்றி யுவி பா. நீங்கள் கேன்சரில் இருந்து போராடி மீண்டு வந்த விதம் மக்கள் அனைவருக்குமே ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. எப்போதுமே உங்களை சுற்றியுள்ள நபர்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ள நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று யுவராஜ் சிங்கிற்கு நன்றி தெரிவித்து விராட் கோலியும் இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

விராட் கோலி வெளியிட்ட இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணிக்காக யுவராஜ் சிங் கடைசியாக விளையாடிய நாட்களிலும் சரி, பெங்களூரு அணியில் விளையாடிய போதும் சரி கேப்டனாக கோலி யுவ்ராஜ் சிங்கிற்கு நிறைய ஆதரவளித்து இருந்தார். அந்த வகையில் அவர்கள் இருவருமே தற்போதும் நல்ல நட்புடன் அன்பை பகிர்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐபிஎல் ஏலத்தால் ஒரே ஆண்டில் 10 கோடிகளுக்கு அதிபதிகளான 5 வீரர்கள் – செம்ம அதிர்ஷ்டம் தான்

மூன்று வகையான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிய விராட் கோலி கடைசியாக நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இருப்பினும் தனக்கு ஓய்வு வேண்டும் என்று வெஸ்ட் அணிக்கெதிரான தொடரின் கடைசி டி20 போட்டியிலும், அதற்கடுத்து நாளை துவங்கவுள்ள இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரிலும் ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement