ஐபிஎல் ஏலத்தால் ஒரே ஆண்டில் 10 கோடிகளுக்கு அதிபதிகளான 5 வீரர்கள் – செம்ம அதிர்ஷ்டம் தான்

ipl-players
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளும் தங்களுக்கு தேவையான 204 வீரர்களை 551 கோடி ரூபாய்கள் செலவில் வாங்கியுள்ளன. இதை அடுத்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடரை நடத்தி ரசிகர்களை மகிழ்வதற்கு உண்டான அனைத்து வேலைகளிலும் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.

hugh

- Advertisement -

முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பின் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா அளவில் நடைபெற்ற இந்த வீரர்கள் ஏலம் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஒரு சில வீரர்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் மிகப் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதே சமயம் சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஒரு சில வீரர்களை எந்த அணியும் வாங்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் கொடுத்தது.

கோடீஸ்வரர்கள்:
பொதுவாகவே ஐபிஎல் ஏலத்தால் எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் ஒரே வருடத்தில் கோடீஸ்வரர்களாக மாறிய கதையை பலமுறை பார்த்துள்ளோம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் வீரர் இஷான் கிசன் 15.25 கோடிகளுக்கு ஒப்பந்தமாகி சாதனை படைத்தார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் நிகழ்ந்த நேரடி ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவரை போல இந்த ஐபிஎல் 2022 ஏலத்தால் ஒரு சில வீரர்கள் திடீரென 10 கோடி ரூபாய்களுக்கு அதிபதியாகியுள்ளார்கள். அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

livingstone 1

1. லியாம் லிவிங்ஸ்டன் (10.75 கோடி): சமீப கலங்கலாக டி20 கிரிக்கெட்டில் அசத்தி வரும் இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் லியம் லிவிங்ஸ்டன் இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த வருடம் 11.50 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள அவர் கடந்த ஐபிஎல் 2021 தொடரில் வெறும் 75 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்ந்தமானார். இதன் வாயிலாக கடந்த ஆண்டை விட இந்த வருடம் 10.75 கோடிகள் அதிக சம்பளத்தை பெற்றுள்ள லியம் லிவிங்ஸ்டன் ஒரு வருடத்திலேயே 10 கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

- Advertisement -

2. வணிந்து ஹஸரங்கா: இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுழல் பந்து வீச்சாளராக வலம் வரும் வணிந்து ஹஸரங்கா கடந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் காயத்தால் விலகிய ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பாவுக்கு பதில் வெறும் 50 லட்சத்துக்கு விளையாட பாதியில் ஒப்பந்தம் ஆனார். அந்த சீசனில் கிடைத்த வாய்ப்பில் அசத்திய அவர் சமீப காலங்களாக அனைத்து விதமான டி20 போட்டிகளில் சூப்பராக பந்து வீசி வருகிறார். இதன் காரணமாக இந்த வருடம் அவரை 10.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு கடும் போட்டிக்கு பின் மீண்டும் பெங்களூரு அணி நிர்வாகம் வெற்றிகரமாக வாங்கியுள்ளது. இதன் வாயிலாக கடந்த ஆண்டை விட அவர் இந்த ஆண்டு 10.25 கோடி ரூபாய் சம்பளத்தை கூடுதலாக பெற்றுள்ளார்.

Hasaranga

3. ஹர்ஷல் படேல் (10.55 கோடி): கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்காக வெறும் 20 லட்சம் என்ற மிகக் குறைந்த தொகைக்கு வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் பெஞ்சில் மட்டும் அமர்ந்து வந்த அவர் கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக பந்துவீசி 32 விக்கெட்டுகளை சாய்த்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களுக்கு வழங்கப்படும் ஊதா நிற தொப்பியை வென்று சாதனை படைத்தார்.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் அந்த வாய்ப்பில் அபாரமாக செயல்பட்டு தற்போது இந்திய டி20 அணியில் ஒரு முக்கிய வீரராக விளையாடி வருகிறார். ஒரே வருடத்தில் இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்ற அவரை மீண்டும் வாங்க கடும் போட்டி போட்ட பெங்களூரு அணி இறுதியில் 10.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வெற்றிகரமாக ஏலத்தில் வாங்கியது. அதன் காரணமாக கடந்த சீசன்களில் வெறும் 20 லட்சம் சம்பளம் பெற்ற அவர் இப்போது 10.55 கோடிகள் கூடுதலாக பெறுவது அவரின் திறமையை காட்டுகிறது.

Harshal

4. தீபக் சஹர் (13.20 கோடி): ராஜஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் ஐபிஎல் தொடரில் கடந்த 2018ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெறும் 80 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். அதன்பின் சென்னை அணியில் அபாரமாக பந்து வீச துவங்கிய அவர் பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்ததால் பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்பட்டு வந்தார். சென்னையில் சிறப்பாக விளையாட துவங்கிய அவருக்கு நாளடைவில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது.

- Advertisement -

அதில் அசத்திய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சரித்திர சாதனை படைத்தார். அத்துடன் பேட்டிங்கில் லோயர் ஆர்டரில் அதிரடியாக ரன்களை விளாசும் திறமையையும் பெற்றுள்ளதால் தற்போது நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இவரை மீண்டும் வாங்க கடும் போட்டி போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதியாக 14 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வெற்றிகரமாக வாங்கியது. இதன் வாயிலாக கடந்த சீசன்களில் 80 லட்சம் சம்பளத்தை பெற்று வந்த அவர் தற்போது ஒரே வருடத்தில் 13.20 கோடி சம்பளத்தை கூடுதலாகப் பெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இருப்பினும் தற்போது இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் காயமடைந்துள்ளதால் விரைவில் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

deepak 1

5. பிரசித் கிருஷ்னா (9.80 கோடி): உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்னாவை கடந்த 2014ஆம் ஆண்டு அடிப்படை விலையான வெறும் 20 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. அந்த அணியில் கடந்த சில வருடங்களாக மிகச் சிறப்பாக விளையாடி வந்த அவருக்கு சமீபத்தில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் 140+ கீ.மீ வேகத்தில் தொடர்ச்சியாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படிங்க : ஜெயிக்குறது பெரிசு இல்ல. தோனியிடம் இருந்து அந்த விஷயத்தை கத்துக்கோங்க – ரோஹித்துக்கு அட்வைஸ்

இதன் காரணமாக தற்போது நடைபெற்ற ஏலத்தில் அவரை 10 கோடிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் கடும் போட்டிக்கு பின்னர் வெற்றிகரமாக வாங்கியது. இதன் காரணமாக கடந்த சீசனில் 20 லட்சத்துக்கு விளையாடி வந்த அவர் இந்த வருடம் 9.80 கோடிகள் கூடுதலாகப் பெற்று கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய்களுக்கு அதிபதியாக மாறியுள்ளார்.

Advertisement