ஜெயிக்குறது பெரிசு இல்ல. தோனியிடம் இருந்து அந்த விஷயத்தை கத்துக்கோங்க – ரோஹித்துக்கு அட்வைஸ்

Rajkumar
- Advertisement -

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் முழுநேர டி20 கேப்டனாக முதல் முறையாக பொறுப்பேற்ற அனுபவ வீரர் ரோகித் சர்மா அந்த சமயத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியை பெற்று முதல் தொடரிலேயே அமர்க்களப்படுத்தினார். அவரின் திறமையை உணர்ந்த பிசிசிஐ கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டனாக இருந்த விராட் கோலியை அதிரடியாக நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை முழுநேர வெள்ளை பந்து கேப்டனாக நியமித்தது.

indvswi

- Advertisement -

அந்த வேளையில் தென்ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கு முன்பாக காயமடைந்த அவர் அந்தத் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து காயத்திலிருந்து குணமடைந்து வந்த அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அபாரமாக கேப்டன்ஷிப் செய்து 3 – 0 என்ற கணக்கில் அடுத்தடுத்த ஒயிட்வாஷ் வெற்றிகளை பெற்று கொடுத்து அசத்தியுள்ளார்.

சூப்பர் கேப்டன்ஷிப்:
இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சாதனை படைத்துள்ளது. கடைசியாக முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி தலைமையில் ஒரு சில மாதங்கள் நம்பர் ஒன் டி20 அணியாக இருந்த இந்தியா அதன்பின் விராட் கோலி தலைமையில் 2017 – 2021 வரை சுமார் 5 வருடங்கள் விளையாடி வந்த போதிலும் நம்பர் ஒன் இடத்தை அடைய முடியவில்லை.

Rohith

ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற 3 மாதங்களுக்குள் மிகச் சிறப்பாக செயல்பட்ட ரோகித் சர்மா இந்தியாவை நம்பர் ஒன் இடத்துக்கு கொண்டு வந்துள்ளது பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. முன்னதாக 68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட் கோலி கடந்த ஜனவரியில் திடீரென அந்த பதவியில் இருந்து விலகினார். எனவே அவருக்கு பதில் டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா பிப்ரவரி 24ஆம் தேதி துவங்க உள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் முதல் 3 வகையான இந்திய கிரிக்கெட்டுக்கும் முழு நேர கேப்டனாக செயல்பட உள்ளார்.

- Advertisement -

கற்க வேண்டும்:
களத்தில் ஒரு கேப்டனாக செயல்படும் ரோகித் சர்மா மிகவும் கூலாக காட்சியளிப்பதுடன் முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்கு பல வெற்றிகளை தேடித் தந்து வருகிறார். இருப்பினும் ஒரு சில பதற்றமான பரபரப்பான சூழ்நிலைகளில் கோபமடையும் அவர் இந்திய அணியில் தமக்குக் கீழ் விளையாடும் வீரர்களிடம் மனம் வருந்தும் செயல்களில் ஈடுபடுவது ரசிகர்களை வருத்தமடையச் செய்கிறது.

Rohit Sharma Kicks Bhuvanehswar Kumar

குறிப்பாக சமீபத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் ஒரு போட்டியில் இந்தியாவின் அனுபவ சீனியர் வீரர் புவனேஷ்வர் குமார் ஒரு கேட்ச்சை தவற விட்டதால் கோபமடைந்த ரோகித் சர்மா அவர் மீது பந்தை எட்டி உதைத்தார். அதேபோல் அந்த டி20 தொடரின் ஒரு போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இளம் வீரர் இஷான் கிஷானிடம் மிகுந்த கோபத்துடன் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து ரோகித் சர்மா பேசியது ரசிகர்களை பதற வைத்தது.

- Advertisement -

பொறுமயாக இருக்க வேண்டும்:
இந்நிலையில் கேப்டனாக அணியில் உள்ள வீரர்களிடம் ரோகித் சர்மா நடந்து கொள்வது பற்றி விராட் கோலியின் இளவயது பயிற்சியாளர் ராஜ்குமார் தெரிவித்தது பின்வருமாறு. “களத்தில் ரோஹித் சர்மா கூல் கேப்டனாக காட்சி அளிக்கிறார். ஆனால் பதற்றமான சூழ்நிலைகளில் அவ்வப்போது கோபப்பட்டு விடுகிறார். பொது இடத்தில் தனது அணியில் விளையாடும் வீரர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

Rajkumar

ஒருவேளை அணியில் உள்ள ஒருவர் தவறு செய்தால் அதை பொறுமையான வழியில் அவர்களுக்கு உணர வைக்க வேண்டும்” என கூறியுள்ளார். கிரிக்கெட்டில் பரபரப்பும் பதற்றமும் ஏற்படுவது சாதாரண ஒன்று என தெரிவித்துள்ள ராஜ்குமார் எவ்வளவு கடினமான நேரமாக இருந்தாலும் அதற்காக அணி வீரர்களிடம் கோபப்படாமல் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டுமென இந்திய கேப்டனை கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

இந்திய அணியில் உள்ள வீரர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி கூல் கேப்டன்ஷிப்புக்கு பெயர் போன முன்னாள் இந்திய கேப்டன் தோனியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ராஜ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியது பின்வருமாறு. “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒன்று சேர்ந்து செயல்படுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைக் கடந்த காலங்களில் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது பார்த்துள்ளோம். அவர் கேப்டனாக இருந்தபோது கடைசி கட்ட ஓவர்களில் பவுண்டரி எல்லைக்கு பீல்டிங் செய்ய சென்று விடுவார்.

இதையும் படிங்க : நான் ஒத்துக்குறேன். இவர் உண்மையிலே வேர்ல்டு கிளாஸ் பிளேயர் தான் – இந்திய வீரரை புகழ்ந்த பொல்லார்டு

அந்த சமயத்தில் எம்எஸ் தோனி தான் விக்கெட் கீப்பராக நடுவில் இருந்து கேப்டன்ஷிப் செய்வார்” என கூறினார். கடந்த காலங்களில் விராட் கோலி கேப்டனாக இருந்த போது அவருக்கு பல ஆலோசனைகளை முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வழங்கினார். தற்போது அதே வழியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பில் இல்லாத நிலையிலும் விராட்கோலி பல ஆலோசனைகளை வழங்குவது பாராட்டுக்குரியது என ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement