நான் ஒத்துக்குறேன். இவர் உண்மையிலே வேர்ல்டு கிளாஸ் பிளேயர் தான் – இந்திய வீரரை புகழ்ந்த பொல்லார்டு

Pollard
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கைரன் பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக நடைபெற்ற டி20 தொடரை கைப்பற்ற கஷ்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் பலம்வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை மீண்டும் டி20 கிரிக்கெட்டில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி வரலாற்று சாதனை நிகழ்த்தியது.

Rohith-1

- Advertisement -

அதோடு ஆறு ஆண்டுகள் கழித்து டி20 தரவரிசை பட்டியலிலும் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. இந்த மூன்று போட்டிகளிலுமே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சூர்யகுமார் யாதவ் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் மூன்றாவது போட்டியில் 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்த நிலையில் வெங்கடேஷ் அய்யருடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் 5-வது விக்கெட்டுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவருடன் சேர்ந்து 91 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து 184 ரன்கள் என்ற பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார்.

இந்த போட்டியில் 31 பந்துகளை சந்தித்த அவர் 7 சிக்சருடன் 65 ரன்கள் குவித்து தனது அதிரடியை வெளிப்படுத்தியிருந்தார். அதன்பின்பு விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது அந்த இலக்கினை துரத்த முடியாமல் 167 ரன்கள் மட்டுமே குவிக்க 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.

sky 1

இந்நிலையில் இந்த மூன்றாவது டி20 போட்டி முடிந்து இந்திய அணியின் வீரரான சூர்யகுமார் யாதவ் குறித்து மிகவும் பாராட்டி பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு கூறுகையில் : சூர்யகுமார் யாதவ் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். அவருடன் மும்பை அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் போது அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன் .2011 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் தற்போது எவ்வளவோ முன்னேறி விட்டார்.

- Advertisement -

இந்திய அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ்களில் விளையாடி வருகிறார். உண்மையிலேயே அவர் இந்தியாவின் 360* பிளேயர் தான். அவருடைய பேட்டிங் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை இந்திய வீரர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணிக்காக தற்போது என்ன செய்து வருகிறாரோ அதையேதான் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் செய்து வருகிறார். அவர் ஒரு அற்புதமான வீரர் என்று பொல்லார்டு பாராட்டினார்.

இதையும் படிங்க : தோனி, கோலி, ரோஹித் 3 பேரின் கேப்டன்சி ஸ்டைலில் உள்ள வித்தியாசம் இதுதான் – ஷேன் வாட்சன் ஓபன்டாக்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினை வென்ற சூர்யகுமார் யாதவ் நாளை துவங்க உள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறியுள்ளது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள பின்னைடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement