தோனி, கோலி, ரோஹித் 3 பேரின் கேப்டன்சி ஸ்டைலில் உள்ள வித்தியாசம் இதுதான் – ஷேன் வாட்சன் ஓபன்டாக்

Watson 1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் கண்டெடுத்த மகத்தான 2 வீரர்களான எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த குரு சிஷ்யன்களாக கருதப்படுகிறார்கள். களத்திலும் சரி களத்திற்கு வெளியேயும் சரி இந்த 2 வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் மிகுந்த அன்பும் மரியாதையும் பாசமும் நேசமும் வைத்துள்ளதை இந்திய ரசிகர்கள் பலமுறை பார்த்துள்ளார்கள். இதில் இன்று விராட் கோலி இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு எம்எஸ் தோனி தான் காரணம் என்று அவரே பலமுறை வெளிப்படையாக கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப காலங்களில் சொதப்பிய விராட் கோலிக்கு அப்போதைய கேப்டனாக இருந்த தோனி அதிகப்படியான வாய்ப்பும் ஆதரவும் அளித்து இன்று உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக வளர உதவினார்.

தல தோனி – கிங்க் கோலி:
முதலில் கடந்த 2007ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையில் கத்துக்குட்டி வங்கதேசத்துக்கு எதிராகக் கூட வெற்றி பெற முடியாமல் வெளியேறிய இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கித்தவித்தது. அப்போது அதே 2007ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த டி20 உலக கோப்பையில் முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்த எம்எஸ் தோனி யாருமே எதிர்பாராத வண்ணம் பரம எதிரியான பாகிஸ்தானை பைனலில் தோற்கடித்து இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். அந்த நேரத்தில் கிடைத்த அடுத்தடுத்த தோல்விகளால் பெற்ற வலிக்கு அந்த வெற்றி மிகப் பெரிய மருந்தாக அமைந்தது.

virat

அதன்பின் 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் உலக கோப்பை, 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி என அடுத்தடுத்த உலக கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனியால் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுத்தர முடியவில்லை. அதன் காரணத்தால் தமக்கு கீழ் விளையாடி வந்த விராட் கோலியிடம் இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்துவதற்கான பண்புகள் இருந்ததை உணர்ந்த அவர் 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வு பெற்றார். அப்போது டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி 7வது இடத்தில் பரிதவித்த இந்தியாவை தனது ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாகத் தொடர்ந்து 5 ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார்.

- Advertisement -

15 வருட சகாப்தம்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னைவிட மிஞ்சும் சிஷ்யன் விராட் கோலியின் திறமையை பார்த்த எம்எஸ் தோனி கடந்த 2017ஆம் ஆண்டு அனைத்து விதமான கேப்டன்சிப் பொறுப்பையும் அவரிடம் கொடுத்துவிட்டு தனது சிஷ்யன் தலைமையில் சாதாரண வீரராக விளையாடி வந்தார். அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற போதிலும் 3 வயதான கிரிக்கெட்டிலும் முடிந்த அளவுக்கு மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து வந்த விராட் கோலி கடந்த மாதம் அனைத்து விதமான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

Dhoni-kohli

மொத்தத்தில் கடந்த 2007 முதல் 2021 வரை சுமார் 15 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி வந்த எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்தியாவிற்காக பல சரித்திர வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்கள். இதில் இந்திய ரசிகர்கள் கனவிலும் எண்ணிப் பார்க்காத 3 வகையான உலக கோப்பைகளை எம்எஸ் தோனி பெற்றுக்கொடுக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பல சரித்திர வெற்றிகளை விராட் கோலி பெற்றுக் கொடுத்தார். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒரு சகாப்தம் என்று கூறலாம்.

- Advertisement -

கூல் தோனி, நெருப்பு கோலி:
இந்நிலையில் இந்தியாவிற்கு கடந்த தசாப்தத்தில் நீண்ட காலங்களாக கேப்டன்ஷிப் செய்து வந்த எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரின் கேப்டன்ஷிப் பற்றி ஆஸ்திரேலியாவின் நட்சத்திர முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் மனம் திறந்துள்ளார். இதுபற்றி ஐசிசி அதிகாரப்பூர்வ பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி பல மிகச்சிறப்பான விஷயங்களை செய்துள்ளார். தனது அணியில் உள்ள வீரர்களுக்கு அவர் உத்வேகத்தை அளிக்கும் விதம் அபாரமானது. மேலும் ஒவ்வொரு போட்டியிலும் அவர் தன் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருப்பார். என்னைப் பொறுத்தவரை தனது வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் விராட் கோலியை ஒரு சூப்பர் மனிதராக கருதுகிறேன். அவர் ஒரு மிகச்சிறப்பான நல்ல மனிதர், களத்திற்கு வெளியே கூட அவர் சம அளவில் நடந்து கொள்வார். அவர் தலைமையில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடியது எனக்கு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது” என விராட் கோலி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

Watson

கடந்த 2016 – 2017 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையில் விளையாடியுள்ள ஷேன் வாட்சன் கடந்த 2018 – 2020 ஆகிய வருடங்களில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடியுள்ளார். அந்த நேரத்தில் எம்எஸ் தோனியின் கேப்டன்ஷிப் எப்படி இருக்கும் என்பது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனியின் நரம்புகளில் ஐஸ் ஓடுகிறது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

போட்டியில் எவ்வளவு அழுத்தம் ஏற்பட்டாலும் அதை எடுத்துக் கொள்ளக்கூடிய அவரின் தன்மை, தனது அணியில் விளையாடும் வீரர்களுக்கு அவர் அளிக்கும் ஆதரவு மற்றும் ஒவ்வொரு வீரரின் திறமையின் மீது அவர் வைக்கும் நம்பிக்கை போன்றவை அபாரமானது. அவர் எப்போதும் நம்மால் என்ன முடியும் மற்றும் தம்மைச் சுற்றி இருப்பவர்களால் என்ன முடியும் என்பதை பற்றி தெரிந்து வைத்திருப்பார். அவர் களத்தில் உபயோகப்படுத்தும் தனது நுணுக்கங்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

Watson

கலக்கல் ரோஹித்:
அதே சமயம் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்து தற்போது இந்தியாவின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் ஷர்மா பற்றி ஷேன் வாட்சன் தெரிவித்தது பின்வருமாறு. “அவர் ஒரு எளிமையான இயற்கையான கேப்டன். அவரை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிக உன்னிப்பாக கவனித்துள்ளேன். அவர் தனது வேலையை எப்போதும் சிறப்பாக செய்து முடிப்பார்.

அதேபோல் கடினமான நேரங்களில் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளை சிறப்பாக வழிநடத்துவார். அவர் கேப்டனாக இருப்பதன் காரணமாகவே ஐபிஎல் தொடரில் மும்பை மீது எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது” என கூறினார். ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷேன் வாட்சன் இப்படி இந்தியாவின் 3 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களையும் அவர்களின் கேப்டன்ஷிப் ஸ்டைல்களையும் தனித்தனியே புகழ்ந்து பேசியுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா இலங்கை முதல் டி20 : போட்டி நடக்கும் லக்னோ மைதானம் எப்படி, பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

ஐபிஎல் தொடரில் கடந்த 2008 முதல் விளையாடி வந்த ஷேன் வாட்சன் 2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவர் கடந்த 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் 2018ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement