இந்தியா இலங்கை முதல் டி20 : போட்டி நடக்கும் லக்னோ மைதானம் எப்படி, பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

Lucknow-stadium
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அண்டை நாடான இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. முதல் போட்டி லக்னோ நகரிலும், 2 ஆவது மற்றும் 3 ஆவது போட்டி தர்மசாலா நகரிலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

INDvsSL

- Advertisement -

சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட் வாஷ் வெற்றி பெற்றது. இதன் வாயிலாக கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா சாதனை படைத்துள்ளது.

முன்னோட்டம்:
பொதுவாகவே சொந்த மண்ணில் காலம் காலமாக எதிரணிகளை மிரட்டக் கூடிய ஒரு அணியாக இருந்து வரும் இந்திய அணியில் தற்போது ரோகித் சர்மா தலைமையில் பல நட்சத்திர வீரர்கள் அடங்கியுள்ளதால் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் மீண்டும் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் கடந்த சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய இலங்கை 4 – 1 என்ற கணக்கில் படு தோல்வியை பெற்று ஏமாற்றத்துடன் இந்தியாவுக்கு வந்துள்ளது.

INDvsSL

இருப்பினும் இந்திய காலச் சூழ்நிலைகள் பற்றி நன்கு தெரிந்த இலங்கை அணி குறைந்தபட்சம் இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு போராடும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த தொடரை இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக கண்டு களிக்கலாம்.

- Advertisement -

லக்னோ கிரிக்கெட் மைதானம்:
இந்த தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 24ஆம் தேதியன்று அதாவது நாளை இரவு 7 மணிக்கு லக்னோ நகரிலிருக்கும் பாரத ரத்னா அட்டல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. சரி இப்போட்டியை முன்னிட்டு போட்டியை முன்னிட்டு இந்த போட்டி நடைபெறும் வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தின் வரலாற்றுச் சுவடுகளை புரட்டிப் பார்ப்போம் வாங்க.

Lucknow cricket Stadium

1. உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் பெயரில் தோற்றுவிக்கப்பட்ட இந்த கிரிக்கெட் மைதானத்தில் 50,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமைந்து போட்டிகளை கண்டுகளிக்க முடியும்.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை 4 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அந்த 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்று அசத்தி உள்ளன.

indvswi

3. இந்த மைதானத்தில் வரலாற்றில் இந்தியா இதுவரை 1 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த அப்போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

- Advertisement -

5. அதன்பின் 4 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக இந்த மைதானத்தில் களமிறங்கவுள்ள இந்தியா முதல் முறையாக இலங்கையை இந்த மைதானத்தில் நாளை சந்திக்க உள்ளது.

rohith 1

அதிக ரன்கள்:
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த வீரர், ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் மற்றும் சதம் விளாசிய ஒரே வீரர் போன்ற அனைத்து சாதனைகளையும் இந்தியாவின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா தன் வசம் வைத்துள்ளார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 61 பந்துகளை சந்தித்து சதம் விளாசி 111* ரன்கள் விளாசி இந்த சாதனைகளை படைத்துள்ளார்.

இந்த மைதானத்தில் நடந்த டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் : இந்தியா – 195/2, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2018.

Bhuvanesh Kumar

அதிக விக்கெட்கள்:
இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கேஷ்ரிக் வில்லியம்ஸ் 8 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் இந்த மைதானத்தில் இந்தியாவின் சார்பில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக புவனேஸ்வர் குமார் (2 விக்கெட்கள்) உள்ளார்.

வெதர் – பிட்ச் ரிப்போர்ட் :
இந்த போட்டி நடைபெறும் லக்னோ நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. அத்துடன் இந்த மைதானம் வரலாற்றில் பந்துவீச்சை விட பேட்டிங்க்கு சற்று அதிக சாதகமாக இருந்து வருகிறது. இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 166 ஆகும். இதிலிருந்தே இந்த மைதானம் எந்த அளவுக்கு பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது என தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க : முதல் டி20 : ஹிட்மேன் தலைமையில் களமிறங்க போகும் 11 பேர் கொண்ட – இந்திய உத்தேச அணி இதோ

அதே சமயம் முழு திறமையை வெளிப்படுத்தும் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகள் நிச்சயமாக கிடைக்கும் என நம்பலாம். மேலும் இதற்கு முன் இந்த மைதானத்தில் நடந்த 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது 160+ ரன்கள் எடுத்தால் வெற்றி நிச்சயம் என கூறலாம்.

Advertisement